பக்கம்:இலக்கியக் கலை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் மரபுகளும் 57. பார்த்தால், பாட்டு பொய் கூறுவதாகத்தர்ன் தோன்றும். ஆனால், தமிழ்நாட்டில் காணப்பெற்ற பாலை இவ்விதம்தான் இருத்தல்கூடுமே தவிர சகாரா போன்று இராது. இந்நாட்டில் காணப்பெறாத ஒன்றை, எங்ங்ணம், மரபுபற்றிப் பாடல் இயலும்? மேலும் பாலை என்பது முல்லை நிலமும் குறிஞ்சி நிலகும் அழிந்து உண்டாகிறது என்று முன்னர்க் கூறப்பெற்றது. எனவே, தமிழ் இலக்கிய மரபு வாழ்க்கையோடு ஒட்டியதாகவே இருத்தலும் அறிந்து மகிழற்குரியது. இக் கருத்து எல்லாவிடங்கட்கும் ஒக்கும். இம்மரபு நாளாவட்டத்தில் அழிந்து போயினமைக்கும் காரணம் பின்னர்க் காணலாம். வருணனை மரபு. நிலத்தை அடுத்து மரபுவழி வருவது வருணனை ஆகும். சங்ககாலப் பாடல்களில் வருணனை, ஒருவகை. கண்ணால் பார்ப்பதை மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறதோ அவ்வாறே பாடும் இயல்பு பல்கியிருந்த காலம் அது. இயற்கைக் காட்சி ஒன்றைக் கவிஞன் கண்டு அதை வருணிக்கப் புகுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இயற்கையின் செயல்கள் மாறுபாடு இல்லாது கூறப்பெற்றிருக்கும். அங்குக் கற்பனை எந்த அளவில் அந்தக் கவிஞனுக்குப் பயன்பட்டது என்றால், கண்ட சில காட்சிகளைக்கொண்டு காணாதவற்றை எவ்வாறு இருக்கும் என்று கற்பிக்கின்ற வரைதான். இதோ ஒரு கவிஞன் குளிர் காலத்தை வருணிக்கிறான். இதில் ஒன்றாவது நடைபெறாதது அன்று. ஆனால், எல்லாம் ஓரிடத்தில், ஒரு நேரத்தில் நடைபெற்றவை என்று கூறல் இயலாது. 3 "மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் * , குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டை பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர் வெண்மணல் செவ்வரி காரையொடு எவ்வாயுங் கவரக்' (நெடுநல்வாடை, 9–17) (மாடுகள் மேய்ச்சலை மறப்ப, குரங்குகள் குளிரால் குந்தி இருக்கப், பறவைகள் குளிரால்விழ, மாடுகள் கன்றுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/75&oldid=751292" இலிருந்து மீள்விக்கப்பட்டது