பக்கம்:இலக்கியக் கலை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் இலக்கியம் 65 கற்பனையால் ஆக்கிய கலை. இவ்வைந்துவகைப் பிரிவினையில்’ இலக்கியம் முழுவதும் அடங்கிவிடக் காணலாம். முதலாவது பிரிவைத் தமிழ் இலக்கணக்காரர்கள் அகத்திணை என்று கூறுவர். அகப்பாடல்கள் அக இலக்கியங்கள் என்று தமிழில் வழங்கும் பாடல்கள் அனைத்தும் இப்பகுதியில் அடங்கும். அன்றியும் பெரியவர்கள் பாடிய பக்திப்பாடல்கள், உற்றாரைப் பிரிந்து வருந்திப் பாடிய கையறுநிலைப் பாடல்கள் என்பவை அனைத்தும் இவ்வகையைச் சேர்ந்தவையே. இரண்டாம் வகையைத் தமிழர் புறத்திணை என்று கூறுவர். இவ்வகை இலக்கியத்தில் கவிஞன் தன் மனத்தில் ஆழ்ந்து அனுபவித்தவற்றைக் கூறுவதில்லை. அதற்கு மறுதலையாகப் புறஉலகம் காணும் காட்சி முதலியவற்றை அமைத்துப் படுகிறான். பெருங்காப்பியம் முதலி யவை இத் தொகுப்புள் அடங்கும். மூன்றாவது வகை இலக்கியம் பிரயாண நூல்கள் போன்றவை. நான்காவது வகை இயற்கையை மட்டும் வருணித்து அதில் நம்முடைய தொடர்பு எவ்வளவு என்று கூறும் நூல்கள் ஆகும். ஐந்தாம் தொகுப்பில் அனைத்துக் கலைகளும் அடங்கக் காணலாம். இவ்வைந்தையும் ஒன்றுசேர்த்து இரண்டு பிரிவு இலக்கியமாக மேனாட்டார் வகுப்பர். இலக்கியம் என்றே, இன்றளவும் கருதப்பட்டுவரும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரண்டையும் நோக்குவோம். இரண்டும் இலக்கியம் என்பதில் ஐயமில்லை, ஆனால் இவை இரண்டினிடை யேயும் ஒரு வேற்றுமை உண்டு. முதலாவதாகவுள்ள சிலப்பதிகாரத் தில் கலை இருப்பினும் அதன் பயன்வேறு தனியாக இல்லை. சிலப்பதிகாரத்தைப் படிக்கும்பொழுது உண்டாகும் இன்பம் ஒன்றுதான் அதன் பயன். இதையல்லாமல் வேறு பயனையடைய நாம் அதனிடம் செல்வதில்லை. அதனை ஆக்கிய கலைஞனும் வேறு பயனை நாம் அதிலிருந்து எதிர்பார்க்கச் செய்யவில்லை. எனவே இத்தகைய இலக்கியத்தை இன்ப இலக்கியம் என்று கூறு இறோம். இதனை அடுத்துள்ள மணிமேகலையை ஆக்கிய சாத்தன் நமக்குப் புத்த தருமத்தை உபதேசிக்க அவ்விலக்கியத்தைக் கருவி யாகக் கொள்கிறான். அதனால் மணிமேகலையின் கலைத்தன்மை பெரிதும் குறையவில்லையாயினும் அதனைக் கற்றலின் பயன் அதுவேயன்று. நூலின் புறத்தே அமைத்திருத்தலின் அது சபய்ன் இலக்கியம்' என்று கூறப்பெறும். மேலை நாட்டவர் கண்ட இப் பிரிவினை ஓரளவு தமிழ் மொழிக்கும் பொருத்தும். இ. -5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/83&oldid=751301" இலிருந்து மீள்விக்கப்பட்டது