பக்கம்:இலக்கியக் கலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் இலக்கியம் 71 இளங்கோவைப் புர்ர்த்து 'முடியுடைவேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக என்று வினாவுகிறார். இதனால் விளையும் பொருத்தமின்மை அறிந்தும், இளங்கோ தம் கலைக் கோயிலைக் கட்டி முடித்தார் என்றால், இவ்விலக்கியங்களின் பெருமையை என்னென்று புகழ்வது! . . . . . " : - இவ்வாறு தோன்றிய இவ்விலக்கியங்கள், இத்துணைக் காலங் கழித்தும் உயிருடன் நின்று நிலவுகின்றன. அம்மட்டோ? தோன்றிய காலத்தில் மக்கிட் சமுதாயத்தில் என்ன வரவேற்பைப் பெற்றனவேர் அதே வரவேற்பை இன்றும் பெறுகின்றன. அன்றும் இன்றும் அது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாகவே விளங்கு கிறது. ஆன்ால், அன்று இவ்விலக்கியங்களை வரவேற்ற மக்கள் வேறு; இன்று வரவேற்கும் மக்கள் வேறு. ஏணி வைத்தாலும் எட்டாத அளவு வளர்ந்து, முற்றிலும் புதுமையில் வந்த இன்றைய மனிதர்களிடமும் இவ்வில்க்கியங்கள் பழைய வரவேற்பைப் பெறு கின்றனவெனின் அதன் காரணம் என்னை? நாளுக்குநாள், நம் மனம் வேறுபாடு அடைவதைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய ஒன்றை இன்று உலகம் பழமை என்று தள்ளிவிடுகிறது; வெறுக்கவும் முற்படுகிறது. காலையில் வடித்த சோற்றை மாலையில் உண்ண வெறுக்கிற இந்த உலகில் சில இலக்கியங்களை மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டு கள் கழித்தும், மக்கள் படித்துப் போற்றுவதன் கருத்தென்னை? ஒருவேளை இம் மக்கள் மனமாறுபாட்டிற்கேற்ப, இவ் விலக்கியங் களும் புதுப்புதுக் கோலங்கள் புனைந்து மகிழ்விக்கின்றனவா? அவ்வாறுமில்லையே! அன்று இளங்கோ நாட்டிய கலைக்கோவிலும் கம்பன் கண்ட இலக்கியப் பூங்காவும் இன்றும் பழைய வடிவுடன் தாமிேயுள்ள்ன! பின்னர் என்ன காரணத்தால் இவை நின்று நிலவுகின்றன? - - - - » یا به " .. இவை தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை உள்ளார் எத்தனை வகையான மனமாறுபாட்டுடன் இவற்றைக் கற்றிருப்பர்? அவர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாட்டிற்கும் மேலாக, இவற்றில் ஏதவாவது மகிழ்ச்சி ஊட்டும் இயல்புகளைக் கண்டு தாமே இருப்பர்? இத்துணைப்பேரில். பெரும்பாலானவர் இவ், விலக்கியங்களைப் பயனற்றவை என்று கண்டிருந்தால், மக்களினத் திற்குத் தீங்கிழைப்பவை என்று நினைத்திருந்தால் இவற்றை ஒதுக்கித் தள்ளி இரார்களா? நூற்றுக்கணக்கான தலைமுறைகளில் மாறிக்கொண்டும், வளர்ந்துகொண்டும் வந்த அவர்கள் அனை வருடைய மனப்பண்புகட்கும், இவை தக்க மகிழ்ச்சி அளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/89&oldid=751307" இலிருந்து மீள்விக்கப்பட்டது