பக்கம்:இலக்கியக் கலை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை ή7 அவனிடம் இயற்கையில் அமைந்து கிடக்கிறது எனக் காணலாம். மனிதனிடம் அமைந்துகிடக்கும் பகுத்தறிவு காரணமாக, ஏனைய உயிர் வருக்கங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு அவன்பால் அமைகிறது. ஏனைய உயிரினங்கள் வாழுகின்றன. ஏன்? பிறந்து விட்ட ஒரே காரணத்தால், வாழ்க்கையின் பயன் பற்றியோ, வாழவேண்டிய அவசியத்தைப் பற்றியோ, அவற்றிற்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மனிதன் இவை இரண்டையும் அறிந்தவன் ஆதலின் வாழ்க்கையை வாழ்க்கைக்காகவே வாழுகிறான். அவன் அவனுக்காகவே, வாழுகிறான். எனவே, அவனைப்பற்றியே அவன் சிந்தனை செய்யவும், ஆராய்ச்சி நடத்தவும் முடிகிறது. தன்னைத்தானே ஆராய்ச்சி செய்யும் வன்மை மனிதன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. கலையின் தோற்றம் இங்ங்னம் தன்னைப்பற்றி ஆராய மனிதன் பல வழிகளைக் கையாளுகிறான். அவற்றுள் ஒன்று அறிவு இவ்வறிவு நன்கு வளர்ந்த நிலையில்தான் 'யான் யார்? என்னுள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்னை யார் அறிவார்?' என்ற கேள்விகள் பிறக்கின்றன. - மற்றொன்று நடைமுறை. முன்னையது "அறிவியல் முறையின்பாலும் ஏனையது செயலின்பாலும் அடங்கும். அறிவியல்துறை மூலம் ஆராய்ந்து, தன் வளர்ச்சியையும், பொருள்களின் உள்ளமைப்பில் உள்ள காரண காரியத் தொடர்பையும் பொருள்களின் பன்மைக்கும், தனக்கும் உள்ள தொடர்பையும் அறிகிறான். நடைமுறை மூலம் ஆராய்ந்து தன் உள்ளுணர்ச்சிகள் எங்ங்னம் செயலாகப் பரிணமிக்கின்றன எனக் காண்கிறான். மேலும், தன்னால் செய்யப்பட்ட செயல்களில் தன்னையும் தனது இயல்பையும் காண்கிறான். - இரண்டாவதாகக் கூறப்பட்ட இயல்பே கலவரின் தொடக்கமாகும். வெளிப்பொருள்களில் மனிதன் தன்னை ஏற்றிக் காணும் இவ்வியல்பே பல்வேறு வடிவுகள் எடுக்கிறது. இறுதியில் கலையாக முகிழ்க்கிறது. எனவே, கலையின் தோற் றத்திற்கு மூலகாரணம் மனிதனின் இயல்பிலேயே அமைந்து கிடக்கக் காண்கிறோம். இவ் இயல்பைப்பற்றிச் சிறிது ஆராயவேண்டும். கலைகள் பெரும்பாலும் இயற்கையைப் பார்த்து ஆக்கப்பட்டவையாகும். ஆனால் சிலர் கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/95&oldid=751314" இலிருந்து மீள்விக்கப்பட்டது