பக்கம்:இலக்கியக் கலை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*،. 4: ۔ 73 இலக்கியக் கலை யெல்லாம் மனிதன் இயற்கையைப் பிரதிசெய்து வைத்தவையே என்று கூறுவர்-இது தவறு. கலைக்கு நிலைக்களமாக இயற்கை உண்மை, ஆனால், அவை பிரதிகள் அல்ல. இயற்கையை மனிதன் அநுபவிக்கின்றான். அவனுடைய மனம், அறிவு, சித்தம் முதலிய வற்றிற்கு ஏற்பவே அவ்னது அநுபவமும் அமைகிறது. அவ்வநுபவம் கலையாக ஆக்கப்படும்பொழுது இயற்கை அங்கில்லை. அதற்குப் பதிலாகத் தனிப்பட்ட இவன் மனத்தில், அது எக் காட்சியை வழங்கிற்றோ அக்காட்சியே கலையாக வருகிறது. எனவே, இவன் அங்கும் தன்னை ஏற்றிக் காண்கிறானே தவிர, அதன் உண்மையை அப்படியே காண்பதில்லை. கலையே முகிழ்க்க இயற்கை துணை ச்ெய்வதாயினும் இயற்கையின் நகலன்று கலை. - உதாரணமாக ஒன்று காண்போம். காலைக்கதிரவனின் தோற்றத்தை ஒருவன் நிழற்படம் எடுக்கிறான்; மற்றொருவன் வண்ணத்தில் ஒ வி ய மா க த் தீட்டுகிறான், மூன்றாமவன் இவ்வழகிய காட்சியைக் கவிதையாக இயற்றுகிறான். இம் மூவருள் ஒவியனும் கலைஞனும் கலைஞர் என்று கூறப் பெறுவர்; ஆனால் நிழற்படம் எடுப்பவன் கலைஞனாகக் கருதப்படுவதில்லை. நிழற்படம் எ டுப் பவன் இயற்கைக்கு நகல் தயாரிக்கிறான். அவ்வியற்கைக் காட்சி அவன் மனத்தில் என்ன உணர்வை, அநுபவத்தை உண்டாக்கிற்றென்று அவனும் கவலைப்படவில்லை. நமக்கு அறிவிக்கவும் இல்லை. ஆனால், பின்னர்க் கூறிய இருவரும் அவ்வாறு இல்லை. சூரிய உதயம் எவ்வாறு இருந்தது என்றுமட்டும் அவர்கள் ஒவியமும் கவிதையும் கேம்க்குக் கூறவில்லை. அதற்கு மேலும் அக்காட்சி, அவ்விருவர் மனத்திலும் எத்தகைய உணர்ச்சியை, அநுபவத்தை ஆக்கிற்று என்பதையே அவர்கள் தம்முடைய கலைமூலம் வெளிப்படுத்து கின்றனர். இதற்கு விளக்கம் தேடி அதிகதூரம் செல்ல வேண்டிய தில்லை. ஒரே கதிரவன் உதயத்தை இரண்டு ஒவியர் வண்ணப் படமாக அமைத்தாலும் இரண்டும் வேறுபட்டுக் காணப்படும். ஏன்? இருவருங்கண்டது ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒரே 'கதிரவன் உதயத்தையே எனிலும் இருவருக்கும் வெவ்வேறான "மின்ங்கள் உண்டல்லவா? அம் மனநிலைக்கு ஏற்பவே அவர்கள் "பட்ங்களும் அமையும். ஆதலால்தான் அவர்கள் ஒவியங்களும் மாறுபடுகின்றன். எனவே, கதிரவன் உதயத்தைப் படம் தீட்டினார்கள் என்று கூறுவதைக் காட்டிலும் அவரவர் கண்ட கதிரவன் உதயத்தைத் தட்டினார்கள் என்பதே பொருத்தமாகும். ஆதலின் கலை இயற்கையின் பிரதி என்று கூறுவது பொருந்தாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/96&oldid=751315" இலிருந்து மீள்விக்கப்பட்டது