பக்கம்:இலக்கியக் கேணி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இலக்கியக்கேணி

கற்புடையார் எனப் பெறுவர். கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று, வெள்வேல் கொற்றங் காண்' என்றனன் பாண்டியன் நெடுஞ்செழியன். என் கன

வன் கள்வனல்லன்; என்காற் சிலம்பு மணியுடையரியே' என்று மறு மொழி பகர்ந்தனள் மறக் கற்புடைய கண் ணகி. நன்று, யாமுடைச் சிலம்பு முத்துடையரியே’’ என்று பகர்ந்து, கண்ணகியின் சிலம்பை நெடுஞ்செழியன் சோதித்தான்; அவள் மாற்றத்தின் வாய்மையை யுணர்க் தான்; கெடுக வென் ஆயுள் ' என்று கூறிமயங்கி வீழ்க் தான்; "கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொருஅள், மன்னவன் செல்வழிச் செல்க யான் எனத் தன்னுயிர் கொண்டவன் உயிர்தே டினள் போல், பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள். கோப்பெருங் தேவியின் இச் செயலே சிறந்த கற்புக்கு எடுத்துக் காட்டு. -

இவ்வாறு இரண்டு உயிர் என்று இன்றி, ஒருயிர் போல உடன் இறத்தலைக் கண்டார் அதிசயித்துச் சொல்வதனை மூதானந்தம் ' என்று ஒரு துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலே யாசிரியர் அமைத்துள்ளார். இவை நிற்க,

வயந்தமாலைக்கு மாதவி யுரைத்தது

கோவலன் இறந்த செய்தி கேட்டு மாதவி மனம் மாழ்கினுள். புகாரில் இந்திர விழாவும் வந்தது. அவ் விழாவுக்கு மணிமேகலையும், மாதவியும் வரவில்லை. மாதவியின் தாயாகிய சித்திராவதி, மாதவி வாராமையால் மனம் புழுங்கிள்ை; வயந்த மாலேயை அழைத்து ஊரார்