பக்கம்:இலக்கியக் கேணி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . இலக்கியக்கேணி

மாசத்திக்கல் எனப்பெறும். இவ்வொழுக்கத்தைத் தொல்காப்பியனர், காஞ்சித்திணைத் துறைகளுள், ' கல் லோள் கணவனெடு களியழல் புகீஇச், சொல்லிடை யிட்ட மாலைகிலே ' என்ற துறையில் ஒதுவர். (நச்சினர்க் கினியர் : பாலகிலே ' என்று பாடம் ஒதுவர்.) உடன் கட்டை ஏறுதல் எஞ்ஞான்றும் அருகிய வழக்கின தாகவே இருந்தது எனல் பொருந்தும். உடன்கட்டை ஏறுதலைப் பெண்டிர் பெருமையாகவே கொண்டனர்; அதனை விலக்குதல் அறிவுடையார் செயலாகவும் இருங் தது; விலக்குபவர், மாசத்திகளால் வெறுக்கப்பெற்றனர் என்றும் அறிய வேண்டும். சுருங்கக் கூறின் சக கமனம் ஒரு வியத்தகு செயலாகவே எப்பொழுதும் கருதப்பெற். றது எனலாம்.

ஒரு மந்தியின் செயல்

ஒர் ஆண் குரங்கு இறந்தது. மந்தி இப் பெரும் பிரிவை ஆற்ருதாயிற்று: கைம்மைத் துன்பத்தை வெறுத்தது. அதற்கு ஒரே ஒரு குட்டியிருந்தது. அக் குட்டி மரமேறுதல் முதலியவற்றையுங் கற்கவில்லை. அதனையுங் கருதாது தன் சுற்றத்தினிடம் அக் குட்டி யைச் சேர்த்து, மலைமேலிருந்து கீழே பாய்ந்து உயிர் விட்டது அம்மந்தி. இதனைப் பின்வரும் குறுங் தொகைச் செய்யுள் கூறுகிறது:

' கருங்கட் டாக்கலே பெரும்பிறி துற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளேமுதற் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே."