பக்கம்:இலக்கியக் கேணி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 103

இங்ங்ணம் விலங்குகளிலும் ஆண் விலங்கு இறந்ததும் பெண் உடன் உயிர் நீத்த செயல் தலையன்பைக் காட்டு கிறது. விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் இணை பிரியாநிலை கண்கூடு. ஆகவே இம்மந்தியின் செயல் புலவர் கற்பனையன்று; உண்மையேயாம். இத்தலேயன்பு மானிடர் மாட்டுக் காணப்படுதலே இயல்பாகவே கோடல் தகும்; எனினும் வியத்தகு செயலாகவே இலக்கி யங்களிற் காண்கிருேம்.

பெருங்கோப் பெண்டு

சங்ககாலத்துப் பாண்டிய அரசருள்ளே பழமை யான அரசன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்; இவன் ஒரு பெரும்புலவன்; இவன் மனைவியின் பெயர் பெருங்கோப் பெண்டு. இப் பெருங்கோப் பெண்டும் சிறந்த கல்வி யறிவு வாய்ந்தவள். பாண்டியன் இவளைச் சிறிதும் பிரிதலாற்ருப் பேரன்பு உ ைட ய வ ன் என்பது, ஒருகால் பாண்டிய அரசன் வஞ்சினம் கூற நேர்ந்த பொழுது, சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக' என்றதால் விளங்கும். நெருகல் உளன் ஒருவன் இன்றில்லே என்னும், பெருமை யுடைத்திவ் வுலகு,' ஆகலின் பூ த ப் பா ண் டி ய ன் பூதவுடலே நீத்தான். பொருங்கோப் பெண்டு ஆற்ருெளுத் துயரெய்தினுள்: ஈமத் தீயிற்பாய்ந்து உயிர்க்காதலளுேடு இறப்பதே மேல் எனத் துணிந்தாள்: நீர் நிலைக்குச் சென்று மூழ்கினுள்; நீர் படிந்த கூந்தல் புறத்திலே தாழத் துன்பமேவிய கண்களையுடையவ ளாய்ப் புறங்காட்டை நோக்கி விரைந்து சென்ருள் (புறம்-247); தீயிற் பாய்ந்து உயிர்துறக்கத் துணிந்தாள். அப்பொழுது அங்கிருந்த மதுரைப் பேராலவாயார்