பக்கம்:இலக்கியக் கேணி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இலக்கியக்கேணி

போன்ற சான்ருேர்கள் தீப்புகாதவாறு தடுக்க, அச்சான் ருேரை நோக்கி, பல்சான்றீரே நின் தலைவைேடு இறக்க ேேபா என்று கூறியிருத்தல் வேண்டும்; அவ் வாறு சொல்லாது செல்லற்க” என்று தடுக்கின்றீர் கள்... கைம்மை நோன்பு மேற்கொண்டு துன்புறுதல் எனக்கு இயலாது...என் பெருந்தோட் கணவன் இறந்தா ளுகத் தாமரையுடைய நீர் செறிந்த பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து' என்று கூறித் தீப்பாய்ந்தாள் (புறம்-246).

கழாத்தலையார் கூற்று

சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனும் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் திருப்போர்ப் புறத்துப் பொருதனர். முடிவில் இருவரும் இறந்தனர். யாரேனும் ஒருவர் வெற்றியுறின் வெற்றி யுற்றவர் போர்க்களத்தைத் தமதாக்கிக் கொள்ளலாம். இருவரும் இறந்தமையாற் களங்கொளற் குரியோரின் றிப் போர் நின்றது. அவர் பெண்டிர் யாவரும் உடன் கட்டை ஏறினர்களாம்! இதனைக் கழாத்தலேயார் என் னும் புலவர், பெண்டிரும், பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தி யாங்கமைக் தனரே ' என்று புறம் 62இற் பாடியுள்ளார்.

ஆய் அண்டிரன் மனைவியர்

பொதிய மலையைச் சூழ்ந்த நாட்டை ஆண்டவன் ஆய் அண்டிரன் என்ற வள்ளல். பழுமரத்தைச் சூழும் பறவைபோல ஆய் அண்டிரனை நோக்கிப் புலவர் வருவர்; அவனும் அவர்களுக்கு வேண்டியவற்றை