பக்கம்:இலக்கியக் கேணி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 107

வானவன் மாதேவியார்

இரண்டாம் பராந்தகளுகிய சுந்தரசோழன் கி. பி. 957 முதல் 970 வரை அரசாண்ட சோழ மன்னன் ஆவான். இவன் இறந்த பொழுது இவன் மனைவியருள் ஒருவராகிய வானவன் மாதேவி என்பார் உடன் கட்டை ஏறினர். இவரது செயற்கருஞ் செயலேத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்ந்து கூறும். திருக்கோவலூர்க் கல்லெழுத்து இவ்வருஞ் செயலைப் பின்வருமாறு கூறுகிறது :

செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திர சமானன் இராஜசர் வஞ்ஞனெனும் புவியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த - முலேமுகம் பிரிந்து முழங்கெரி நடுவனும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் துாண்டா விளக்கு......... மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன் திருப்புய முயங்கும் தேவி.'

அம் மாதேவி தன் இளங் குழந்தையைப் பிரிந்து உடன்கட்டை ஏறிய செய்தி யாவரையும் துன்பக் கடலுள் ஆழ்த்தத்தக்கது.

வீரமாதேவியார்

முதலாம் இராசேந்திரன் 1012 முதல் 1045 வரை ஆண்ட சோழ மன்னனுவான். இவனுடைய மனைவி களுள் வீரமாதேவி என்பாள் உடன்கட்டை ஏறியதாக