பக்கம்:இலக்கியக் கேணி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M08 இலக்கியக்கேணி

முதல் இராசாதிராசனது 26 ஆம் ஆட்சி யாண்டுக்குரிய பிரமதேயக் கல்லெழுத்துக் கூறுகிறது. பிரமதேயத்துச் சபையார் ஒரு புளியமரத்தின் கீழ்க்கூடி ஒரு தண்ணிர்ப் பங்தல் தருமம் நடத்த நிலம் விற்றனர். உடையார் சிறீ ராசேந்திர சோழதேவர் அடக்கம் செய்யப்பெற்ற கல்ல றையிலேயே வீரமாதேவியும் அடக்கம் செய்யப் பெற் ருள் என்றும், அவ்விருவருடைய நீர் வேட்கையைத் தணிப்பதற்காக இத் தருமம் நிறுவப்பெற்றது என்றும் கூறப்பெறுகிறது. அவ்வரசமாதேவியின் உடன் பிறந் தாராகிய சேனபதி மதுராந்தகளுன பரகேசரி வேளார் என்பவரே இத் தருமத்தைச் செய்தவராவார்.

கங்கமாதேவியார்

பரகேசரி வர்மனது 3 ஆம் ஆண்டுக்குரிய அள்ளுர்க் கல்லெழுத்து வீரசோழ இளங்கோ வேளார் என்ற ஒரு வருடைய தேவியார் தீப்பாய்ந்ததாகக் கூறுகின்றது. அவர் தீப்பாயும் பொழுது ஒரு விளக்கு எரிக்க நிபந்தம் கொடுத்தார். இளங்கோ வேளார் தேவியார் கங்கமா தேவியார் தீப்பாய்கின்ருர் குடுத்தது ' என்பது கல் லெழுத்து வாசகம். இக் கல்லெழுத்து முதற்பராந்தக சோழன் காலத்ததாதல் கூடும் என்று அறிஞர் கருதுவர்.

மைசூர்ப்பகுதியில்

இரண்டாம் இராசேந்திரனுடைய 6 ஆம் ஆட்சி யாண்டு (சகரயாண்டு 979)க்குரிய கன்னடக்கல்லெழுத்து மைசூரில் பெளடுரு என்னும் ஊரில் உள்ளது. கி.பி. 1057 ஆம் ஆண்டில் ஒருவன் மல் யுத்தப் போட்டியில் அரசனுடைய உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்