பக்கம்:இலக்கியக் கேணி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 109.

டான். அக் குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பெற்றது. அவன் மனைவியும் நுங்கநாட்டுச் சிற்றரசன் மகளுமான தேகப்பே என்பாள் பெற்ருேர் எவ்வளவோ தடுத்துங் கேளாமல் தன் கணவனு. டன் உடன் கட்டை ஏறத் தீர்மானித்தாள். இச்செய்தி யைத் தெரிவிக்குங் கல்வெட்டுக் கன்னட மொழியில் உருக்கமாகக் கவிபோல் அமைந்திருக்கிறது.

பியாதரகல்லி என்ற ஊரில் வீரராசேந்திரனது 5 ஆம் ஆண்டு (1067) க்குரிய கல்லெழுத்து, ஒருத்தி தீப்பாய்ந்த செய்தியைத் தெரிவிக்கிறது.

பொட்டப்பள்ளி என்ற ஊரில் வீரராசேந்திரனது 6 ஆம் ஆட்சியாண்டுக்குரிய கல்லெழுத்துளது. ஒருவ னுடைய தந்தை யிறந்தான்; தந்தையோடு தாயும் தீயிற் பாய்ந்தாள்; அவர்களின் நினைவாக நீர்நிலம் 50 குழியும் காட்டாரம்பம் 1000 குழியும் அவர்களுடைய மகன் தானஞ் செய்தான் என்று அக் கல்லெழுத்துப் புகல் கிறது.

கெப்பலகுப்பே என்ற ஊரில் முதல் குலோத்துங்க சோழனுடைய 18 ஆம் ஆண்டுக்குரிய அதாவது 1088இல் வெட்டப்பட்ட கல்வெட்டுளது. அழகிய சோழன் என்று ஒருவனுடைய மகன் நவலாசிராசன் என்பான் இறந்தான்; அவனுடன் அவன் மனைவி உடன்கட்டை. ஏறினுள்: இவ்விருவருடைய நலனுக்காக அந்த அழகிய சோழன் ஒரு நந்தவனத்தை ஏற்படுத்தினன். இதுவே. இக்கல்லெழுத்திற் கண்ட செய்தியாகும்.