பக்கம்:இலக்கியக் கேணி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இலக்கியக் கேணி

பேரில் இவ்விரு புலவர்களாலும் பாடப்பெற்ற எல்லாப் பாடல்களும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற் கோளாக எடுத்தாளப் பெற்றன. தித்தற்கும் இவ விளங்கோவிற்கும் மனவொற்றுமை உண்டாயிற்ரு என்பதும் தெரிந்திலது.

சாத்தந்தையார் புறம் 287 ஆம் பாடலேயும் பாடி யுள்ளார். அப்பாடல் வஞ்சித்திணையுள் மாராயம் பெற்ற நெடு மொழி என்னும் துறைக்கு மேற்கோளாக ஆளப் பெற்றுள்ளது. இப் புலவருடைய மகளுர் கண்ணஞ் சேந்தனர் என்ற புலவர் ஆவர். இவர் தாமும் பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்ருகிய திணைமொழி யைம்பது என்ற நூலின் ஆசிரியர் ஆவர்.

நக்கண்ணையார் அகத்துறையமைந்த பாடல்களும் பாடியுள்ளார். அவை அகம் 252, நற்றிணை 19, 87ஆம் பாடல்களாகும்.

புறம் 852 ஆம் பாட்டிலும், அகம் ஆறிலும் பரணரும், புறம் 395 இல் நக்கீரரும் தித்தனைக் குறித் துள்ளமையின் இப்புலவர்கள் காலத்துக்குத் தித்தன் முற்பட்டவன் என்பது உறுதி.

தித்தன்வெளியன் என்று ஒருவர் அகம் 226 இல் குறிக்கப்பெற்றுள்ளார். இவரைத் தித்தன் மகன் என்பர் சிலர். தித்தனுக்கே தித்தன் வெளியன் என்ற பெயருண்டு என்பர் வேறு சிலர். வீரைவெளியன் தித்தனர் என்று அகநானூற்றுப் புலவர்களுள் ஒருவர் காணப்பெறுகிருர். இவர் அகம் 188 ஆவது செய்யுளைப்