பக்கம்:இலக்கியக் கேணி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வைக் கோப்பெருகற்கிள்ளி 119

பாடியவர். இவர் தித்தனது பெயரன் என்று கருதப் பெறுகிரு.ர்.

போரவை

இனிப் போர்வை' என்பதைப் போரவை' என்று கொள்வர் திரு ரா, இராகவையங்கார் அவர்கள் (தமிழ் வரலாறு பக்கம், 60.) போரவ்ையாவது இருவர் மற்போர் முதலியன நிகழ்த்துங்கால் நடுகின்று, தோலாமை தோல்வி, இவற்றை உள்ளவாறு கூறவல்ல போர்முறை அறிந்த வீரர் அவை என்று உய்த்து உணரக்கிடக்கின்றது. ஆமூர் மல்லனை மற்போரில் அட்டுவென்ற பெருநற்கிள்ளி போரவை காணப் பொருதனன் என்றும், அவன் போரவை ஒன்று புரந்தனன் என்றும் அறிதல் தகும்.'

மற்போர் நிகழ்ந்த இடம் ஆமூர் ஆகும் என்று திரு. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கருதுவர் போர்வை என்பதைப் போரவை என்றே கூறி, ' இவன் பெயரில் போரவை என்பது போர்வை எனக் காணப்படுவது ஏடுபெயர்த்தெழுதி னேரால் நேர்ந்தபிழை” என்றும் தம் புறநானூற்றுப் பதிப்பு 205 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்.