பக்கம்:இலக்கியக் கேணி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய இலக்கியம் 125

என்ற நூலைப் பாடினர். சம்பந்தர் அப்பர் காலத்துக் குப்பின் ஒரு நூற்ருண்டுக்கு உள்ளே வாழ்ந்தவர் சுந்த ரர். இவர் காலத்தில் சேரமான் பெருமாள் என்றவர் சேர மன்னனுக இருந்தார். இச் சேர மன்னன் சுந்தர ருடைய தோழர். இவ்விருவரும் சேர்ந்து தமிழ் நாட் டுத் தலங்கள் பலவற்றைச் சுற்றி வந்தார்கள். சுந்தரர் பாடிய பதிகங்கள் 100. சேரமான் பெருமாள் பாடிய நூல்களுள் சிறந்தவை பொன்வண்ணத்தந்தாதி, திருக் கைலாய ஞானஉலா என்பன. இவர்களுக்குப் பின் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர். இவர் பாடியதே திருவா சகம். இது ஒதுபவருடைய மனத்தை உருக்க வல்லது. இத்திருவாசகத்தின் பெருமையை மேட்ைடவரும் நன்கு அறியுமாறு Dr. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த். துள்ளார். அண்மையில் திருவாசகமணி திரு. K. M. பாலசுப்பிரமணியம் அவர்களும் சீரிய முறையில் ஆங்கி லத்தில் மொழிபெயர்த்துள்ளமை இங்கு அறிதல் தகும்.

இதுவரையிலும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்று நால்வரைப் பற்றிக் கூறினேன். இந்நால்வரும் சைவ சமயகுரவர் எனப்பெறுவர். இவர் பாடியனவே தேவார திருவாசகங்களாம். இவர்க ளும் இவர்கள் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்த சைவ அடியார்கள் நாயனர்கள் என்று கூறப்பெற்ருர்கள். அங்காயனர்களுடைய சரிதங்களைக் கூற எழுந்த நூலே பெரிய புராணம் எனப்பெறும். இதற்குத் திருத்: தொண்டர் புராணம் என்றும் பேருண்டு. இதனை இயற்றியவர் 12 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்னும் புலவர் பெருமான்.