பக்கம்:இலக்கியக் கேணி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இலக்கியக் கேணி

பெரிய புராணத்தோடு ஒத்து எண்ணப் பெறும் சைவசமய இலக்கியம் திருவிளையாடற் புராணம் ஆகும். இந்நூல் மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபெரு மான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறுவது. திருவிளையாடற் கதைகளைக் கூறும் நூல்களுள் சிறந்தது பரஞ்சோதிமுனிவர் பாடிய திருவிளையாடற் புராணம்.

இவற்ருேடு ஒப்பக் கருதப்பெறும் இன்னொரு புரா ணம் கந்தபுராணம் என்பது. கந்தபுராணம் முருகப் பெருமானது வரலாற்றைக் கூறுவது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாசாரியார் இந்நூலேப் பாடியவர் ஆவர். இந்நூலில் தr காண்டம் வள்ளியம்மை திரு மணப் படலம் யாவரும் படித்து இன்புறுதற்குரியது.

கி. பி. 6 முதல் பத்தாம் நூற்ருண்டு வரை வாழ்ந்த வர்களே ஆழ்வார்களும். ஆழ்வார்கள் வைணவ சம யத்தைப் பரப்பியவர் ஆவர். அவர்கள் அருளிய பாடல்கள் நாலாயிரப் பிரபந்தம் எனப்பெறும். ஆழ்வார்களுள் சிறந்தவர்கள் நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வாரும் ஆவர். மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் நாலங்கம்.கூற' என்பது இதனை வலியுறுத்தும். நம்மாழ்வார் பாடியது திருவாய்மொழி எனப்பெறும். ஆழ்வார்களில் இன்னொருவர் பெரியாழ்வார். அவர் பெற்றெடுத்த பெண்கொடியே ஆண்டாள் எனப் பெறு வார். இவருக்குச் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் பெயருண்டு.

இங்ங்னம் சைவர்களும் வைணவர்களும் LJରJ, தோத்திரப் பாடல்களும் இசையோடு பாடித் தத்தம் சமயத்தை ஓங்கச் செய்த அக்காலத்தில் சமணரும்