பக்கம்:இலக்கியக் கேணி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தாதியில் சுந்தரர் 19

நேர்ந்தது என்றும், திருத்துருத்தியீசனை ஏத்திப் பிணி தீர்ந்தார் என்றும், பின்வரும் (28 ஆம்) பாடலால் அறியலாம் :

நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று துதியா அருள் சொன்னவா றறிவாரிடைப் பெற்றவன்காண் நதியார் புனல் வயல் நாவலர் கோனென்னும் நற்றவனே.

(துருத்தி-குற்ருலம்; புகர்-பிணியால் மேனியிற் காணும் அடையாளம்; சொன்னவாறறிவார்-தலத்து இறைவன்பெயர்)

பிற அடியார்கள்

ஏயர்கோன் வாள்கொண்டிறந்தார் என்பது, 'வன்ருெண்டனே மற்றிப் பிணி தவிர்ப்பான் என்று உடைவாள் உருவி அந்நோய் செற்றுத் தவிர் கலிக் காமன் (85) என்றதாலும், சோமாசிமாறர் சுந்தரர் பால் பெருநண்பு பூண்டவர் என்பது, சோமாசிமாறன் என்பான்......வன்ருெண்டன் தனக்கு மகிழ்துணையே’ (89) என்றதாலும், பெருமிழலைக் குறும்பர் சுந்தரர் கயிலே செல்லும் நாளுக்கு முதல்நாளே கயிலை அடைந் தார் என்பது 27 ஆம் பாடலாலும், கோட்புலியார், 'நாவற்குரிசில் அருள்பெற்ற அருட்கடல் என்ற 68ஆம் பாடற்பகுதியாலும் அறியப்பெறும்.

சேரரும் ஆரூரரும்

சுந்தரருக்குச் சிவபெருமான் யானை அனுப்பியமை யும், சேரமான் சுந்தரர்க்கு முன்பு குதிரையில் சென்ற மையும், 'தென் நாவலர் பெருமாற்குச் சிவன் அளித்த வீரக்கடகரி முன்பு தன்பக்தி இவுளி வைத்த வீரன் ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/20&oldid=676715" இலிருந்து மீள்விக்கப்பட்டது