பக்கம்:இலக்கியக் கேணி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கியக்கேணி

என்று 45 ஆம் பாடலிற் கூறப்பெற்றன. (கரி-யானை: இவுளி-குதிரை: வீரன்-சேரமான்). களையா உடலொடு சேரமானும் ஆரூரரும் கயிலை புகுந்தனர் என்றும் வேறு யாரும் மனித யாக்கையோடும் கயிலே அடைய வில்லை என்றும் பின்வரும் (86 ஆம்) பிாடல் புகலும்:

ஞானவா. ரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம் மாணவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக் (திலே.

கோனவன் கோயில் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்

கந்தரர் வெள்ளையானைமேல் ஆரோகணித்துச் சென்ருர் என்பது, செங்கண் வெள்ளைப் பொள்ளல் நீள்பனைக்கைக் கயம் தான் உகைத்த கற்காளே என்ற 85 ஆம் பாடலினின்றறியலாம். (பொள்ளல் - துளை: கயம் - யானை: கற்காளை என்றது. சுந்தரரை.)

கூனனும் குருடனும்

பரவையாரது ஊடலைத் தீர்க்க இறைவர் இருமுறை தூது சென்ருர். இரண்டாவதுமுறை தூது சென்று மீண்ட இறைவர் சுந்தரரை நோக்கித், “ தாழ்குழல் செற்றம் தனித்தோம் : கம்பி! இனிப்போய் மற்றவள் தன்பால் நணுகு” என்றருளினர். நம்பியாரூரர் பரவைபால் செல்லப் புறப்பட்டார். பரிசனங்கள் மங்கலப் பொருள்கள் தாங்கி முன் சென்றனர். இவர்களுள் கூனனும் குருடனும் இருந்தனர். இவ் விருவரும் தம் உடற் குறைவினல் தண்மாலே தாம்பூலம் இவற்றை ஏந்திச் செல்ல முடியாமை குறித்து வருந்திச் சுந்தரரிடம் விண்ணப்பித்தனர். சுந்தரர் திருவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/21&oldid=676716" இலிருந்து மீள்விக்கப்பட்டது