பக்கம்:இலக்கியக் கேணி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டத் தொகை 23

வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் ' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படி பணித்தருளி மறைந்தார். எம்பெருமான் மறைந்ததும் நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை நோக்கிப் புறப்பட்டார் ; அங்கு எழுந்தருளியிருந்த அடியார்களின் திருக் கூட்டத்தைத் தொலைவிலிருந்து கண்டவுடனே கீழே விழுந்து பன்முறை வணங்கினர்; அடியார்களின் அருகே சென்று நின்றுகொண்டு எக்காலத்தும் அழியாத வீர முடையவர்களான அடியார்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவ்வவர் திருப்பெயர் சொல்லி இவருக்கு அடியேன் என்றும், பின் தொகுதியான அடியார்களைக் குறித்து, இத்தொகுதியார்க்கு அடியேன்' என்றும் கூறப்பெறும் திருத்தொண்டத்தொகை என்று பேர் பெற்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

சேக்கிழார் சிறப்புரை

சேக்கிழார் சுவாமிகள் அமயம் வாய்த்துழி யெல்லாம் திருத்தொண்டத் த்ொகையைப் புகழ்ந்துள் ளார். அவை வருமாறு:

1. தமிழ் மாலை

2. திருத்தொண்டத் தொகைப் பதிகம்

8. மற்றிதற்குப் பதிகம் வன்ருெண்டர்தாம் புற்றிடத்தெம் புராணர் அருளினால் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகை எனப் பெற்ற கற்பதி கம்தொழப் பெற்றதாம்

4. சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/24&oldid=676719" இலிருந்து மீள்விக்கப்பட்டது