பக்கம்:இலக்கியக் கேணி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டத் தொகை 27.

திருமடம் ஒன்று திருப்புத்துாரில் இருந்ததாகத் தெரி விறது. (104 of 1908). அவ்வூர்ச் சபையார் திருத்தளி யாண்டார் கோவிலிலிருந்த தயாபஞ்சரம் என்ற மண்ட பத்தில் கூடினர். ஒருவன் ஓர் அந்தணனை ஒரு எருதின் காலில் கட்டி இழுத்துக் கொன்ற குற்றத்துக்குக் கழுவாயாகத் தனிவழிபாடு நடத்தத் திருத்தொண்டத் தொகையான் திருமடத்துக்கு நிலதானம் அன்ரிக்கப் பெற்றது. இனி வீரபாண்டிய தேவரது 17 ஆம் ஆண்டு (கி. பி. 1827) க்குரிய கல்லெழுத்து (116 of 1908) திருத் தொண்டத் தொகையான் திருமடத்து நிலங்களுக்கு வரிகள் தள்ளுபடி செய்யத் திருப்புத்துார் அவையினர் கூடினர்கள் என்று தெரிவிக்கிறது. இவற்ருன் பாண்டி நாட்டிலும் திருத்தொண்டத் தொகையான் திருமடம் இருந்ததென அறியலாம்.

திருத்தொண்டத் தொகையீச்சரம்

சிதம்பரம் நடராசப் பெருமான் திருக்கோயிலின் “ வடக்குக் கோபுரத்தையடுத்துத் திருத்தொண்டத் தொகை யீச்சரம் என்ற ஒன்று குறிப்பிடப் பெறுகிறது. இதில் திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடியார் ஒன்பதின்மருமாக உள்ள பெரு மக்களில், தனியடியார் களுக்குத் தனித்தனித் திருவுருவம் அமைக்கப்பெற்றமை போலத் தொகையடியார்களாகிய கூட்டத்தினருக்குத் தனித்தனி உருவம் அமைக்க முடியாமையின் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு இலிங்கத் திருமேனியாக எழுந்தருளச் செய்திருக்கிறது. முத்தியடைந்த பெரு மக்களை உருவம் தெரிந்தால் உருவமைத்தும், உரு வமைக்க முடியாததற்குச் சிவலிங்கம் தாபித்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/28&oldid=676723" இலிருந்து மீள்விக்கப்பட்டது