பக்கம்:இலக்கியக் கேணி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலக்கியக்கேணி

திருத்தொண்டத் தொகை மாணிக்கம் என்று ஒருவர் பெயர் காணப் பெறுகின்றது (277 of 1897). இதல்ை திருத்தொண்டத் தொகைப்பெயரால் மக்களும் வழங்கப் பெற்றமை தெளிவு.

திருத்தொண்டத்தொகை கல்லூர்

இரண்டாம் குலோத்துங்க சோழனின் 12 ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று களத்துாரில் உள்ளது (346 of 1911) ; சில, நிலங்களைத் தேவதான இறையிலியாக்கிக் குலோத்துங்க சோழன் திருத்தொண் டத்தொகை கல்லூர் என்ற பெயரிட்டுத் தொண் டைமான் என்ற தலைவர்க்கும், வரியிலார், வரிக்கூறு செய்வார்க்கும் உத்தரவு அனுப்பிக்கப் பெற்றது.

முடிப்புரை

திருத்தொண்டத் தொகையின் பெயரால் அமைந்த குகை, மடம், கோயில், ஊர் என்பவைகளைக் காணின் திருத்தொண்டத் தொகையினிடத்துத் தமிழ் மக்களிடை யிருந்த நன்மதிப்பும் பற்றும் நன்கு தெரியவரும். சைவப்பெருமக்கள் திருத்தொண்டத்தொகை ஒதி கன்னெறிப் படர்வாராகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/31&oldid=676726" இலிருந்து மீள்விக்கப்பட்டது