பக்கம்:இலக்கியக் கேணி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இலக்கியக்கேணி

இரண்டாங் குலோத்துங்க சோழனுடைய 15வது ஆட்சி யாண்டில் திருமழுவாடி யுடையார்க்குச் சக்தி ராதித்தவல் இரவு பகல் நுந்தா விளக்கெரிக்க இருங் கோளப்பாடி திருவரங்கமுடையான் திருச்சிற்றம்பல முடையான் இருங்கோளர் என்பார் சாவாமூவாச் செவ்வரியாடு 180 பொலிதகர் கிடாய் இரண்டுடன் அளித்தார். இத்தேவர்க்கு முன் திருருந்தா விளக்குக் குடிகளாய் ஆடு கைக்கொண்டு நெய் அளந்து வருகிற மன்ருடிகளில் ஒருவர் பொன்னர் மேனி வயிச்சிய நாதன் என்ற பெயருடையவர்.

முதற் குலோத்துங்க சோழரது 45 ஆவது ஆட்சி யாண்டில் திருமழுவாடி உடைய மஹா தேவர்க்கு இரவு பகல் சந்திராதித்தவல் திருருந்தாவிளக்கு எரிப் பதற்குச் செவ்வரியாடு 90 விடப் பெற்றன. இங்ங்னம் அளித்தவர் சிற்ருமூர் உடையான் பெருமான் கற்பக மான களப்பாளராஜர் மகள், பூபாலசுந்தரனை சோழக் கோளுர் தேவியார், கற்பகம் ராஜேந்திர சோழியார் என்பவராவர். இவரளித்த 90 ஆடுகளும் எண்மர்க்குப் பகிர்ந்தளிக்கப் பெற்றன ; ஒவ்வொருவரும் நாள் ஒன் றுக்கு உழக்கு நெய் அளக்க வேண்டும். அவ்வெண் மருள் ஒருவன் அரவணை பொன்னர் மேனி என்ற பெயரினன். ==

வயிரத்துரண்

ஒருவரால் 128 குழி நிலம் நான்கு பேரிடத்தி லிருந்து விலக்கு வாங்கப் பெற்றது. அவர்களுள்

5 S. I. I. voi v No. 643 - vol v No. 353 G do No. 640

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/35&oldid=676730" இலிருந்து மீள்விக்கப்பட்டது