பக்கம்:இலக்கியக் கேணி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 இலக்கியக்கேணி

ரைக்குச் சென்றது; சம்பந்தர் எழுந்தருளி யிருந்த திரு மடம் எரி கொளுவப் பெற்றது; அத்தீ பையவே சென்று பாண்டியற் காயது: பாண்டியனது வெப்புத் தீர்த்தது: கூன் நிமிர்ந்தது: சமணரை வாதில் வென்றது: தீயில் சம்பந்தர் இட்ட பதிகம் வேகாதிருந்தது; சம்பந்தர் இட்ட ஏடு எதிரேறிச் சென்றது; கழுவில் சமணர் ஏறியது-ஆகிய இவற்றை யெல்லாம் செய்யுள் 33-இல்

காணலாம்.

அகத்தியரைக் குறித்துப் பண்டைக் குடத்திலுறு முண்டச் சிறுத்த முனி பற்ருசை யுற்று மிக வாழ் சந்தப் பொருப்பு' என்றதினின்று அறியப்படும் (செய்யுள் 39.)

நக்கீரர் பூதத்தால் சிறைப்படுத்தப் பெற்றதும், முருகப் பெருமான் திருவருளால் சிறை வீடு செய்யப் பெற்றதும், செய்யுள் 18-இல் காண்லாம். அப்பாடலிற் கண்ட வரலாறு: ஒரு பொய்கைக் கரையில் ஒரு பெரிய அரசமரம், அதன் இலையொன்று நீரிலும் கிலத்திலும் பொருந்த விழுந்தது; நீரில் விழுந்த பகுதி மீளுயிற்று: நிலத்தில் விழுந்தது பறவையாயிற்று; அவை யொன்றை யொன்று கவ்வி ஈர்த்தன. இவ்வதிசயத்தை நக்கீரர் பார்த்து கின்ருர், அப்பொழுது ஒரு பூதம் இவரை எடுத்துச் சென்று ஒரு குகையில் அடைத்தது. (அக்குகையில் 999 பேர் இருந்தனர்.) எல்லோரும் அச் சிறையினின்று நீங்க நீதிநூல் (திருமுருகாற்றுப்படை) பாடினர். அறுமுகப் பெருமான் மயில்மிசை இவர்ந்து தோன்றி. அனைவர்க்குஞ் சிறைவீடு செய்தருளினர்

-என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/45&oldid=676740" இலிருந்து மீள்விக்கப்பட்டது