பக்கம்:இலக்கியக் கேணி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணை நமதே 51

சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்

என்ன நிகழ் வெய்திஇமையோர்

அந்தவுல கெய்தியர சாளும் அது

வேசரதம் ஆணைநமதே.

(கந்தம்மலி-வாசனைமிகுந்த ஆதிகழல்-சிவபெருமா லுடைய திருவடிகள்: நிகழ்வு எய்தி-இம்மையில் அடைந்து: இமையோர்-தேவர்; சரதம்-உண்மை.)

திருமறைக்காட்டில்

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டிற்குச் சென்று மறைகளால் மூடப்பெற்றிருந்த திருக்கோயில் திருக்கதவினைப் பாட்டுப்பாடித் திறந்தும் மூடியும் அற்புதம் நிகழ்த்தினர் : நாளும் இன்னிசைப் பாமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி இறைவனைப் போற்றித் திருமறைக் காட்டில் தங்கியிருந்தனர். இங்ங்னம் நிகழும் நாளில், பாண்டி நாட்டில் பாண்டிய அரசனாக இருந்தவன் நெடுமாறன் என்ற பெயரினன்; சமணசமயச் சார்பினன்; அவன் மனைவி மங்கையர்க் கரசியார், மந்திரி குலச்சிறையார் ; இவ்விருவர் மட்டும் சைவ சமயத்தைச் சார்ந்தவராய் இருந்தனர். சமண சமயத்தைப் போக்கிச் சைவத்தை நிலைநாட்டக் கூடிய வர் திருஞானசம்பந்தரே என்று உணர்ந்து இவ் விரு வரும் சிலரைச் சம்பந்தரிடம் அனுப்பினர்; அவர்கள் வேண்டுகோட்படி சம்பந்தரும் மதுரைக்குப் போக இசைவு தந்தார். சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளும் செய்தியை அறிந்த திருநாவுக்கரசர் சம்பந்தரை நோக்கி, * பிள்ளாய் ! சமணர்கள் மிக்க வன்மை மிக்கவர்கள் ; இப்பொழுது கோள்களும் தீமை பயக்கும் நிலையில் உள்ளன ; ஆகவே தாங்கள் மதுரைக்கு ஏகுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/52&oldid=676747" இலிருந்து மீள்விக்கப்பட்டது