பக்கம்:இலக்கியக் கேணி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன மதே 53

ஆண நமதென்ன வல்லான்

இங்ங்ணம் நான்கு இடங்களில் திருஞான சம்பந்தர் " ஆணை நமதே ' என்று கூறியுள்ளமை இதுகாறும் கண்ட பாடல்களால் அறியப் பெறும். திருநாரையூர்ச் சைவ அந்தணரும், சிவபாத சேகரளுகிய முதலாம் இராச ராச சோழன் திருமுறைகளை வகுத்ததற்கு உதவி புரிந்தவரும் ஆகிய நம்பியாண்டார் நம்பிகள் இச் சிறப்பினை நன்குணர்ந்தவர்; ஆகவே அவர் தாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் திருஞான சம்பந்தரை ஆணை நமதென்னவலான்’ என்று குறித் தருளினர். அந் நூற்பகுதி பின் வருமாறு:

முத்திப் பகவ முதல்வன் திருவடியை

அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம தென்னவலான் ”

(வரி 44-5)

ஆணைநம தென்ற பெருமாள்

" ஆன நமது' என்றவர் திருஞான சம்பந்தர் என்பது உறுதியாகலின் திருஞான சம்பந்தரைத் தமிழ் நாட்டுச் சைவப்பெரு மக்கள், ஆணே நமதென்ற பெருமாள் ” என்றும் குறிப்பிடலாயினர். அப் பெயரைத் தாமும் பூண்டனர் என்பதைக் கல்வெட்டு ஒன்றிலிருந்து அறியலாம்.

கல்லெழுத்தில்

" ஆணை நமதென்ற பெருமாள்” என்ற பெயர் பிரான்மலைக் கல்வெட்டு ஒன்றில் காணப் பெறுகின்றது. பிரான்மலை, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்துார் வட்டத்திலுள்ளது. இவ்வூர்ச் சொக்கநாதர் கோயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/54&oldid=676749" இலிருந்து மீள்விக்கப்பட்டது