பக்கம்:இலக்கியக் கேணி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிட் பெருமாள் 61

விளக்கத்திலும், உரைத் தொடக்கத்திலும் எடுத்தாண் டுள்ளார்.

வடநூற்புலமை

காமத்துப்பால் முன்னுரையில் இக் காமப்புணர்ச் சியை வடநூலாசிரியர் அராகத்தால் கூட்டும் கூட்டம் என்ப...... இதற்கு இலக்கணம் வாற்சானியம் என்னும் காமதந்திரத்துச் சுரத விகற்பம் என்னும் அதிகரணத் துட் கண்டு கொள்க’ என்றமையாலும், ! விருப்பருச் சுற்றம்” என்ற குறளுரையில் (522) பிள்ளைகளே வேறுவேறு இடத்து நிறுத்தவேண்டு மென்பது சில ஆசிரியர் மதம்” என்றும், ' குற்றம் கடிதல் ' என்ற அதிகாரத்தில் வெகுளியாற் கெட்டமைக்குச் சனமே சயனையும், பிறர்மனை நயத்தலாற் கெட்டமைக்கு இராவணனையும், நுகர்ச்சியாற் கெட்டமைக்கு சச் சந்தனையும், மாண்பிறந்த மானத்தாற் கெட்டமைக்குத் துரியோதனனையும், மாணு உவகையாற் கெட்டமைக்கு வாதாபியையும், இவறுதலாற் கெட்டமைக்குப் புரூர வாவையும், காதல காதல் அறியாமல் செலுத்தியதாற் கெட்டமைக்கு வத்தராயனையும், தன்னை வியந்தமை யான் கெட்டமைக்குக் கார்த்த வீரியார்ச்சுனனையும், எடுத்துக் காட்டாகக் கூறினமையானும், தெரிந்து தெளிதல் ' என்ற அதிகாரத்தில் வியாசர், மகேச்சுவரர், ாரதர், பராசரர், கெளடில்யர், துரோணுசாரியர், உத்த வாசாரியார், சுக்கிரன் ஆகியோர் மதங்களை யெடுத்துக் காட்டியவுரைகளானும், "ஆற்றின் அளவறிந்து கற்க ' என்ற குறளுரையில் கெளடல்ய மதம் என்று கூறி பிருத்தலானும், இவரது வடநூற் புலமை மாட்சி நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/62&oldid=676757" இலிருந்து மீள்விக்கப்பட்டது