பக்கம்:இலக்கியக் கேணி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியாதிருக்க 73

வாழ்த்து : வேண்டுகோள்

வேற் படையை யுடைய செல்வ ! யாழோசையும் இயற்பாட்டுக்களும் பொருந்தியது உன் திருவடி. வேத வொலியும், பூவும், தீபமும் ஏற்றருளியது உன் திருவடி. அகிலும், சந்தனமும், தூபமும் கமழ்வது உன் திருவடி. உன் திருவடியின் கண் உறைதலை வேண்டுகிறேன். உன் திருவடியின் கண் என் சுற்றத்தோடு கூடி உறை வேன்; அங்கு எனக்குரிய இருப்பிடத்தைச் சேர்ந்தாற் போலப் பிரியாது இருப்பேனுக !

குன்றம்பூதனர் வாக்குப் பின் வருமாறு:

புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து

சுருதியும் பூவும் சுடரொடு கூடி எரியுரு(கு) அகிலோ(டு) ஆரமும் கமழும் செருவேல் தானேச் செல்வ ! நின் அடியுறை உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்களம் சுற்றமோ டுடனே. (51-56)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/74&oldid=676769" இலிருந்து மீள்விக்கப்பட்டது