பக்கம்:இலக்கியக் கேணி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர்ப் பந்தல் 7

விணறும் தொட்டியும் இராசராசன் பெயரால் ஏற்படுத்தப் பெற்றன. இவற்றை அமைத்தவன் இராச ராசதேவர் பணிமகன் ஆவூருடையான் கண்ணன் ஆரூரன் என்பவன். தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு வாடோறும் நெல் 2 குறுணியும், தண்ணீர் வார்ப்பவர்க்கு நாடோறும் நெல் 2 குறுணியும் அளிக்கப்பெற்றன. இத்தண்ணிர்ப் பந்தர் தருமம் ஆறுமாதம் நடைபெறும் என்பது இக்கல்வெட்டிலிருந்து அறிகிருேம்.

முதலாம் இராசராச சோழனது 81ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1015-16) கன்னியாகுமரிக் கல்லெழுத்து* ஒரு புனற்பந்தர் ஏற்படுத்தப் பெற்ற செய்தியைக் கூறுகின்றது. குமரிக் கழிக்குடி இராசராச ஈசுவர முடையார் தேவகன்மிகள், ! ஒரு தண்ணீர்ப் பந்தல் ஏற்படுத்த நிலம் விற்றனர். அத்தண்ணீர்ப் பந்தலுக்குச் செயங்கொண்ட சோழன் என்று பெயரிடப்பட்டது. அங்கு ஒரு காவணமும், பலன்தரும் மரங்கள் அதனைச் சுற்றுமடைத்து இருத்தல் வேண்டும் என்றும் அக்கல் லெழுத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மூன்ரும் இராசராச சோழனது 16 ஆவது ஆட்சி ஆண்டுக் கல்லெழுத்து (கி.பி. 1282) ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறது. லேருக்காயனர் தொண்டு புரிந்த தலமாகிய சாத்தமங்கையில், மூன்ரும் இராசராசனது 18 ஆவது ஆட்சியாண்டில், கணிச்சைப்பாக்கத்துத் திருவேகம்பமுடையார் என்பவர் ஒரு தண்ணீர்ப் பந்தல்

  • T. A. S. l. 168-9 t தேவகன்மிகள் - கோயில் காரியங்களைச் செய்பவர். | காவணம் - மண்டபம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/8&oldid=676703" இலிருந்து மீள்விக்கப்பட்டது