பக்கம்:இலக்கியக் கேணி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை 89

என்ற மேற்குறித்த பகுதிகளுள் மகரவீணையும்

மகரயாழும் கூறப்பெற்றுள்ளன. இவை வேறு வேரு

னவை என்று தோன்றுமாறில்லை.

சுந்தரகாண்டத்தில் ' குழலும் வீணையும் யாழும் என்றினையன ' (ஊர்தேடுபடலம் செ. 6) என்றும். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதைப்படலத்தில் (செ. 36இல்) முழவினில் வீணையின் முரளி யாழினில்' என்றும் கூறுதலினின்று வீணை வேறு யாழ் வேறு என்

பது கம்பர் கருத்து என அறியலாம்.

நிகண்டுகளில் வீணை

நாம தீப நிகண்டில் (செ. 112 இல்) மிதுனராசியின் பெயர்களில் ஒன்ருக வினை குறிக்கப் பெற்றுள்ளது: (செ. 464 இல்) விணையின் பெயர்களுள் ஒன்ருக யாழ் கூறப் பெற்றது.

சூடாமணி நிகண்டில், வாரி கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டுமாகும் ” என்றும், மன்னிய யாழ்ப் பேர் கோணவதியொடு விபஞ்சியாகும் ' என் றும் உள்ளது. (பத்தாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி, செ. 42.) மிதுனத்தின் பெயராக யாழ் என்பதைச் சூடாமணி நிகண்டு கூறும் (முதலாவது

தேவப் பெயர்த் தொகுதி, செ. 64).

பிங்கல நிகண்டில், ஆருவது அதுபோக வகையில், (நூற்பா 328 இல்) வீணை கின்னரம் தண்டுமாகும்' என்று கூறியவர், அடுத்து (829 இல்) யாழின் பெயர்க ளுள் ஒன்ருக வீணையைக் குறித்துள்ளார்; பத்தாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/90&oldid=676785" இலிருந்து மீள்விக்கப்பட்டது