பக்கம்:இலக்கியக் கேணி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 இலக்கியக்கேணி

நரசிம்மவர்மன் காலத்தவை (கி. பி. 680-668) மகாபலிபுரத்தில் உள்ள கல்தேர்கள். அவற்றுள் ஒன்று தருமராசர் தேர் எனப்பெறும். இத்தேர் மூன்று கிலேகளை யுடைய மாடக்கோயில். இதில் இரண்டாவது நிலையில் ஒரு சிற்பம் வீணுதர மூர்த்தியாகும். இவர் சிவபெரு மான்; நின்ற நிலையில் இருக்கிருர்; தண்டு என்னும் வீணையை வலதுகையிலுைம் இடதுகையிலுைம் இடது மார்பின்மேல் சாய்த்துப் பிடித்து வீணை வாசிக்கிருர்; வீணை இசையில் ஈடுபட்டுச் செவி சாய்த்திருக்கிருர்; இசையின்பத்தை வியப்பது போல மற்ருெரு வலது கையைத் துக்கி விரல்களை விரித்து வியப்புக் குறியைக் காட்டுகிருர்; இன்னெரு இடதுகை விரல்கள் தாளம் அமைத்தல் போலக் காணப்படுகின்றன. சிவபெருமான் வீணை வாசித்துக் கொண்டு அந்த வீணை இன் பத்தில் முழுவதும் ஈடுபட்டிருக்கும் காட்சி இது.”t

இராசசிம்மன் (கி. பி. 687-705) என்ற பல்லவ அரசன் இசையில் பெரும் புலமையுடையவன். இதனை, வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தும்புரு, விளுங்ாரதன் என்ற இவனது சிறப்புப் பெயர்கள் வலியுறுத்தும். இவற்ருல் இவ்வரசன், இசைக் கருவிகளை இயக்குவதில் வித்யாதரர் களைப் போன்றவன் என்றும், ஆதோத்ய வீணையில் தும்புருவைப் போல வல்லவன் என்றும், வீணையில் நாரதனை ஒத்தவன் என்றும் அறிகிருேம். இவ்வரசனே காஞ்சிபுரத்தில் கயிலாசநாதர் கோயிலேக் கட்டியவன். கயிலாசநாதர் கோயிலில் வீணுதரனுகச் சிவபெருமான் இரு சிற்பங்களில் உள்ளார். இச்சிற்பங்களில் உள்ள

1. மயிலே, சீனி, வேங்கடசாமி-நரசிம்மவர்மன்; பக்கம் 121.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/93&oldid=676788" இலிருந்து மீள்விக்கப்பட்டது