பக்கம்:இலக்கியக் கேணி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இலக்கியக்கேணி

கூற்று. இத்தகைய இன்ப அன்பிளுேடு இல்வாழ்க்கை நடத்தும் இருவரை, ஒரு கணமேனும் பிரிந்துறை வாழ்க்கையைப் பொருத இருவர் என்றும், மனமொத்த இருவர் என்றுங் கூற்றுவன் கருதுவதில்லை. எவரே னும் ஒருவரைக் கூற்றுவன் முன்னர்க் கவர்தல் கண்

கூடு.

தபுதார நிலை

மனைவி யிறப்பின் ஆண் மக்கள் அடுத்துத் தாரம் எய்துவது பெரும்பான்மை. வேருெருத்தியைக் கொள் |ளாது இருப்பவர் சிலரே. வேறு மனைவியை மணக்காது தாரமிழந்த நிலையில், இருப்பதையே காதலியிழந்த தபுதாரநிலை ' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பவருடைய மனைவி பெருங்கோப்பெண்டு இறங் தாள். அவள் பிரிவு இம்மன்னற்குப் பெருங் துன்பத்தை விளைவித்தது; . ஒள்ள முல் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள் மடங்தை, இன்னும் வாழ்வல், என்னுயிர் நீங்குகிற்றிலது.” என்று வருந்தின்ை. இச் செய்தியை அறிவிப்பதே புறம் 245 ஆம் செய்யுள்.

ஆரஞர்

மக்கள் இழந்த இடும்பையினும் மனையாளிழந்த இடும்பையினும் மிக்க விடும்பை விதவையிடும்பை.” இதனைன்றே சிலப்பதிகார வாசிரியரும் "ஆரஞர் உற்ற விரபத்தினி ' என்ற விடத்து விதவையிடும்பையை ஆரஞர் ' என்ற சொற்ருெடராற் குறித்தார்; இத னைப் பின்னும் விளக்குவார் போலக் கணவனை இழங் தோர்க்குக் காட்டுவதில்' என்று வழக்குரை காதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/99&oldid=676794" இலிருந்து மீள்விக்கப்பட்டது