பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 புலவர் கா. கோவிந்தன்



படைகளை அழித்து வெற்றி பெற்ற போரில், அவன் படை வீரர் பலர், புண் பெற்று வருந்துகின்றனர் என்பதை ஒருநாள் அறிந்தான்; அறிந்த நேரமோ, இரவில் நடுயாமம்; குளிர்ந்த வாடைக் காற்று வீசிக் கொண்டே இருந்தது; மழைத் துளிகள் விடாது வீழ்ந்து கொண்டே இருந்தன; என்றாலும், அக்காலத்தின் அருமையினை எண்ணினானல்லன், பகற் காலத்தே சென்று காண எண்ணின் அதற்கு அப்போது ஒய்வு கிடைக்காது; போர்க்கள நிகழ்ச்சிக்கே பகற்காலம் பற்றாது; ஆகவே அவரைச் சென்று காண்டது அப்பகற் காலத்தே இயலாது. அதனால் அவரை அந்நள்ளிரவிலேயே சென்று காணத்துணிந்தான். வாட் புண் பட்ட வீரரைக் கண்டு, ஆறுதல் உரைத்து, அன்பு காட்ட வேண்டும் என்ற வேட்கை, காலத்தின் கொடுமையை மறக்கச் செய்தது. பாண்டில் விளக்கேந்திப் பலர் முன்னே செல்ல, மழைநீர் மன்னன் மீது படாவாறு வெண் கொற்றக் குடையேந்திய ஒருவன் பின்னே வர, காற்றால் அலைப்புண்டு கீழே வரும் தன் மேலாடையினை இடக்கையால் பற்றிக்கொண்டு, வலக்கையில் வாளேந்தி, வழியில் வரிசையாக நிற்கும் குதிரைகள் உடலை ஆட்டுவதால், அவற்றின் உடல்மேல் உள்ள மழைநீர் தெறித்துத் தன்மீது விழுவதையும் பொருட்படுத்தாது, சேறு நிறைந்த தெரு வழியே நடந்து சென்று, பசும்பூண் பாண்டியன் பாசறை புகுந்தான். ஆங்கே படைத் தலைவன், முன்னே கடந்து சென்று, புண்பெற்ற போர்