பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 புலவர் கா. கோவிந்தன்



பெருவாழ்வு கொண்டிருந்த காரணத்தால், ஆண்டு பல ஆகியும், அவர் நரை திரை பெறா நல்லுடல் பெற்றிருந்தார். இத்தகைய பெருவாழ்வு பெற்றிருந்த பிசிராந்தையார்பால், கோப்பெருஞ் சோழன் பேரன்பு கொண்டான். அவரைத் தன் ஆருயிர் நண்பராகக் கொண்டு போற்றினான். “நண்பருட் சிறந்த நண்பர் பிசிராந்தையார்!’ என்று பாராட்டினான். "பிறர் பழிசுறாப் பெருங்குணக் குன்று பிசிராந்தையார்! இன்சொல் வழங்கும் இயல்புடையார்! என் உயிரையும்; உள்ளத்தையும் ஒருங்கே பிணித்த உயர்ந்த நட்புடையார்! ஒரு பொய் கூறின், உலகுள்ளளவும் நிற்கும் உறுபுகழ் வரும் எனக் கூறுவார் உளராயினும் அப்பெரும் புகழ் கருதியும் சிறு பொய்யும் கூறாச் சிறப்புடையார் ! நின் பெயர் யாது?’ என வினவுவார்க்கு என் பெயர் கோப்பெருஞ்சோழன் என என் பெயரைத் தம் பெயராக் கொள்ளும் தனியன்புடையார்! அவர், என் சோணாட்டின் பகை நாடாய பாண்டிய நாட்டில், மிகமிகச் சேய்மைக் கண்ணதாய பிசிர் எனும் ஊரில் வாழ்பவரே எனினும், அவரே என் உயிர் நண்பர்! உண்மை நண்பர்!" எனப் பிசிராந்தையார் புகழ் பாடும் பெருங்குணமுடையனாய் வாழ்ந்திருந்தான்.

கோப்பெருஞ் சோழனைப் போன்றே, பிசிராந்தையாரும் அவன் புகழ் பாடுவதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தார். எங்கும் எப்போதும் "கோப்பெருஞ்சோழன்! கோப்பெருஞ்சோழன்!" என