பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 65



விரும்பினாரல்லர். புலவர், தன் கருத்திற்கு இசையாராதல் அறிந்த அரசன், அரிய ஒர் அறவுரையினை அவர்க்கு அளித்தான். "அன்பும் அறிவும் உடைய புலவர் பெருமக்களே! யானை வேட்டை மேற்கொண்டு சென்றவன், தான் சென்றவினையைத் தப்பாது முடித்து, யானையோடு வருதலும், யார்க்கும் எளிதாய சிறிய பறவை வேட்டை மேற்கொண்டு சென்றவன், அதில் தோற்றுப் பறவை பெறமாட்டாமல் வறிதே வருதலும் உலகில் உண்டு. ஆகவே எண்ணும் எண்ணமெல்லாம் மிக உயர்ந்த எண்ணமாகக் கொண்ட பெரியோர்க்கு ஆகும் காலம் உண்டாயின், அவர் எண்ணியன எல்லாம் எளிதே கைவரப்பெறுதல் உண்டாம். அத்தகையர், விண்ணுல கடைந்து எண்ணிலா இன்பம் அடைதலும், அவ்விண்ணுலகத்தினும் மேலாம் வீட்டுலகம் அடைந்து, பிறவாப் பெருநிலை அடைதலும் எய்துவர். ஒருவேளை அத்தகைய பேரின்ப நிலையினைப் பெறுதல் இயலாது போயின், உலகுள்ளளவும் அழியாது நிற்கும் உயர்ந்த புகழ் பெறுதல் உறுதி. ஆகவே அறிவுடையார், நல்வினையினை எண்ணியபோதே, எண்ணியாங்கே, விரைந்து செய்வர். அத்தகைய நல்லறிவு நன்கு வாய்க்கப் பெறாதாரே, நல்வினை செய்ய வேண்டுமோ? செய்யும் வினையெல்லாம் நல்லவினையாகவே இருத்தல் வேண்டுமோ? ஒரு சில நல்வினை மட்டும் செய்தால் போதாவோ? செய்யும் நல்வினை, செய்ய நினைத்த, இப்,ோதே செய்து முடித்தல் வேண்டுமோ? சின்னாள் கழித்துச் செய்தல்