பக்கம்:இலக்கியச்சுவை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

இலக்கியத்தை எப்படிச் சுவைப்பது; கலைகளை எப்படி ரசிப்பது?- இந்த இரு கேள்விகளுக்கு விடையளிக்கின்றது இந்நூல்.

'பண்டைய லக்கியங்களில் எதுவும் இல்லை; அவை தீயிட்டுப் பொசுக்கத் தகுந்தவை,' என்று கூறுவதோ 'பண்டையப் படைப்புக்களில் தான் எல்லாம் இருக்கிறது' என்று பழம் பெருமையை மட்டும் பேசுவதோ, தவறு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.


கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற பழம்பெரும் மேதைகளை உச்சி மேல் வைத்து மெச்சியும் பாரதி,தாகூர், இக்பால், மாக்சிம் கார்க்கி போன்ற இந்நாள் அறிஞர்களை மனமாரப் போற்றியும் வாயாரப் புகழ்ந்தும் வந்தவர் அமரர் ஜீவா.

"மனிதன் என்ற ந்த சொல் மனிதன் கண்ட சொற்களிலேயே உயர்வான சொல்". என்று கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/11&oldid=1477117" இலிருந்து மீள்விக்கப்பட்டது