பக்கம்:இலக்கியச்சுவை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


செற்றோரை வழி தபுத்தனன்‌
நட்டோரை உயர்வு கூறினன்‌
வலியரென வழி மொழியலன்‌
மெலியரென மீக்‌ கூறலன்‌
பிறரைத்‌ தான்‌ இரப்பறியலன்‌
இறந்தோர்க்கு மறுப்பு அறியலன்‌
வேந்துடை அயைத்து ஓங்குபுகழ்‌ தோற்றினன்‌
வருபடை எதிர்‌ தாங்கினன்‌
பெயர்படை புறங்‌ கண்டனன்‌
கடும்பரிய மாக்‌ கடவினன்‌
நெடுந்தெருவில்‌ தேர்‌ வழங்கினன்‌
ஓங்கு இயல்‌ களிறு ஊர்ந்தனன்‌
தீஞ்செறி தும்பு தொலைச்சினன்‌
பாண்‌ உவப்பப்‌ பசி கர்த்தனன்
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்‌
செய்ப எல்லாம்‌ செய்தனன்; ஆகலின்‌
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படுவழிப்படுக! இப்புகழ்‌ வெய்யோன்‌ தலையே"

எடுத்த எடுப்பில் இந் நிகழ்ச்சி என் எண்ணக் கடலில் குதித்தது.

பல துறையிலும் சிறந்த, நிறைந்த வாழ்வை உண்டு உவந்த அருந் தமிழனின் வாழ்வை என் சிந்தனை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. சங்கப் பொற்காலத் தமிழன் உலகியல் வாழ்வில் எவ்வாறு வேரூன்றி நின்று வெற்றி பெற்றான் என்பதை எண்ண எண்ண என் மனம் பூரித்தது.

கணமும் சுணங்காமல் மத்திய காலத்திற்குப் பறந்தது; கம்பனை நினைந்தது.

இராம காதை கையடைப் படலத்தில் இருந்தே தொடங்குகிறது. கம்பன் 'பால காண்டத்தின்' முகப்பில் ஆற்றுப் படலம், நாட்டுப்படலம், நகரப் படலம் அரசியல் படலம் ஆகியவற்றின் மூலம் தனது கற்பனைக் கைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/15&oldid=1477241" இலிருந்து மீள்விக்கப்பட்டது