பக்கம்:இலக்கியச்சுவை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

22 யுமே காட்டுகிறது. ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கு நிலையும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். இதை ஸ்வாமிகள் கால முழுதும் வலியுறுத்தி வந்தார்" என்று நண்பர் ஒளவை சண்முகம் எடுத்து கூறும்பொழுது அந்த நாளில் முறையான நாடகத்திற்கு சுவாமிகள் ஆற்றிய அரும்பணி நமக்கு நன்கு புரிகிறது. எத்தனையோ பழக்க வழக்கங்களும், படியாமையும் நிறைந்திருந்த நடிகர்கள் மலிந்து நின்ற அந்தக் காலத் தில் சுவாமிகள் பிடிவாதமாக நடிகர்களைக் கட்டுப்படுத்தி முறையாக நாடகத்தை நடத்த முயன்றார் என்பதை எண்ணிப் பார்த்தால்தான் சுவாமிகளின் பெருமையும் தனிச் சிறப்பும் நமக்கு நன்றாகப் புரியும். கோவலன், வள்ளித் திருமணம். பவளக் கொடி, அல்லி அர்ஜுனா, சீமந்தினி, சதி அனுசூயா, மணி மகலை, லவகுசா, சாவித்திரி,ச சுலோசனா, பிரக லாதன். சிறுத்தொண்டர், பிரபு லிங்கலீலை, பார்வதி கல்யாணம், வீர அபிமன்யூ - இவை மாதிரி 40 நாடகங் களை சுவாமிகள் இயற்றி விட்டார் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? கோவலன், மணிமேகலை. போன்ற ஒன்றிரண்டு காப்பியக் கதைகளை விட்டால் வேறு அநேகமாய் புராண காச புளுகுணிக் கதைகள் தானே? சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் முற்போக்கு இருக்கிறது? ஏன் அன்னார் நினைவு அம்சம் விழா என்ன காண்டாட வேண்டுமென்று சிலர் கேட்கிறார்கள்? இதே காரணம் கூறி, தமிழ் நாடக வளர்ச்சியில் அக்கரை யுள்ள சிலரும் இந்த நினைவு விழாவில் பங்குகொ காள்ள மறுக்கிறார்கள் எனத் தெரிகிறது. அத்தகைய அன்பர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளவேண்டியது கடமை என்று கூறுகிறேன். ஏன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/26&oldid=1480294" இலிருந்து மீள்விக்கப்பட்டது