பக்கம்:இலக்கியச்சுவை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

23 முதலில் உங்களிடம் ஒரு அடிப்படை உண்மையை எனது கோணத்திலிருந்து விளக்கிக் கூற லிரும்புகிறேன். ஏனென்றால் அப்பொழுதுதான் தமிழ் நாடக வளர்ச்சியில் சுவாமிகளின் பங்கு பிற்போக்கா, முற்போக்கா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியுமென்று நான் கருதுகிறேன். சரித்திரத்தில் ஒரு வர்க்கம் முன்னேற்றமான செயல் களில் ஈடுபடுகிறது. அதே வர்க்கம் பிற்காலத்தில் பிற் போக்காகி விடுகிறது. இதை நாம் சமுதாய வரலாற்றின் நெடுகிலும் பார்க்கலாம். ஒரே வர்க்கம் தான். ஒரே மக்கள்தான். ஆயினும் முன்னேற்றப் பாதையில் செல்லும் காலத்தில் அவர்களிடம் வெளிப்படும் பண்பும் கருத்தும் வேறு. பிற்போக்கில் அழுந்தி விடுகிற பொழுது அவர்களிடம் உருவாகும் பண்பும் கருத்தும் வேறு. சுப் முதலாளி வர்க்கம் அது முன்னேறிய காலத்தில் மிக மிக முற்போக்கான கருத்துக்களை வெளியிட்டது. பிரெஞ் புரட்சிக் காலத்தில் வெடித்தெழுந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்கள் மிக முற்போக்கானவை அல்லவா? அதை முன்னின்று முழக் கியது முதலாளி வர்க்கம் தானே? ரூசோ, வால்டேர் போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் அன்று புரட்சிகர மான கருத்துக்கள் அல்லவா? அன்று நடுத்தர வர்க்கம் (பூர்ஷுவா) நிலப்பிரபுத்வ சமுதாயத்தை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ வர்க்கமாக உருவாகத் தொடங் காலத்தில் அதன் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள் தானே? பிரெஞ்சுப் புரட்சியைப் பார்த்துத்தானே மெரிக்கப் புரட்சி வெடித்தது. திய இன்றைய நிலைமை என்ன? டிகாலே முதலாளிகளின் பிரெஞ்சு பிரதிநிதி. இன்று உளுத்துப்போன பிற் போக்கில் அழுந்திக் கிடக்கும் அமெரிக்க முதலாளித் துவத்தின் பிரதிநிதி ஐசன் ஹோவர். டிகாலேயம் ஐக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/27&oldid=1480295" இலிருந்து மீள்விக்கப்பட்டது