பக்கம்:இலக்கியச்சுவை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

64 அய்யங்காரும்‌, கணேசபிள்ளையும்‌ செய்குத்‌ தம்பிப்‌ பாவ லரும்‌ இன்ன பிறரும்‌ எழுத்தாலும்‌ சொற்‌ பெருக்காலும்‌ கம்பன்‌ பாடற்களிற்‌ கண்ட நயப்பாடுகளையும்‌, கம்பன்‌ கவிதையைப்‌

பற்றிய

பொதுப்படையான

கருத்துக்‌

களையும்‌ மட்டுமே தமிழ்‌ மக்களுக்கு வழங்கினார்கள்‌. வா.

வே.

௬.

அய்யரின்‌

விமர்சனத்தைப்‌

போன்று

தற்கால முறையில்‌ கம்பனை ஆராய்ந்து பிரசாரத்தில்‌ ஈடுபட்டவர்கள்‌ கே. என்‌, சிவராஜ பிள்ளை, பி.ஸ்ரீ, ஆச்‌ சாரியா, வையாபுரிப்பிள்ளை, டி. கே. சி. ஆதியத்‌ தலா பேராசிரியர்கள்‌. கம்பன்‌ காப்பியம்‌ முழுவதையும்‌ பற்றி; அதன்‌ காப்பியக்‌ கட்டுக்கோப்பு, கவிதை, பாத்திரப்‌ படையல்‌, கதைவளரும்‌ பாங்கு, நாடகபாவம்‌ ஆகிய கூறுகளை முறை யாகவும்‌

முழுமையாகவும்‌,

நயப்பாடுகள்‌,

தன்மை-தரம்‌

ஆகியவற்றை விளக்கமாகவும்‌, எழுதப்‌ பெற்ற விமர்சன நூல்கள்‌ குறிப்பிட்டுக்‌ காட்ட. இதுவரை ஒன்றேனும்‌ வெளி வரவில்லை, கம்பராமாயணத்தை ஒட்டிய குறிப்‌ பிட்டப்‌ பொருள்களைப்‌ பற்றிய விளக்கக்‌ கட்டுரைகள்‌ தான்‌ வெளி வந்துள்ளன. இந்த இனத்தில்‌ கம்பன்‌ கவிகை என்ற கட்டுரைத்‌ தொகுப்பு நூல்‌ குறிப்பிடத்தக்கது. வை. மு. கோவின்‌ பதிப்பில்‌ மட்டுமே இன்று கம்ப ராமாயணத்தின்‌ எல்லாக்‌ காண்டங்களுக்கும்‌ உரை கிடைக்கிறது. வெள்ளேக்கால்‌ முதலியாரின்‌ கம்பராமாயண

சாரமும்‌, டி.கே.சி, பி. ஸ்ரீ. ஆகிய கம்பனில்‌ முங்கி விளக்கங்களும்‌ மூற்கிய பெரியார்களின்‌ கம்பன்‌ கவிதை கம்பனிடம்‌ நம்மை அழைத்துச்‌ செல்லும்‌ தகுதி சான்‌ றவை. ஆய்வு நிறை குடம்‌ வையாபுரிப்‌ பிள்ளையின்‌ ஆராய்ச்சிப்‌ பதிப்பும்‌ மதிப்புக்குரிய நண்பர்‌ முருகப்பாவின்‌ இராம காதை . பாலகண்டம்‌ அயோத்திமாகாண்டம்‌ பதிப்புகளும்‌ குறிப்பிடத்தக்கவை, காரைக்குடி கம்பன்‌

கழகத்தின்‌ பணியும்‌ அதன்‌ செயலாளர்‌ சா. கணேசனின்‌ அரும்பணியும்‌ தமிழ்‌ மக்களின்‌ நன்றியறிதலுக்கு உரியவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/68&oldid=1523026" இலிருந்து மீள்விக்கப்பட்டது