பக்கம்:இலக்கியச்சுவை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

TF ' வேண்டுமென்று அவர்‌ விரும்பினார்‌. அத்தகைய மனிதன்‌ பூவின்‌ அரும்பினுள்‌ இருக்கும்‌ மணத்தைப்‌ போலச்‌ சிறைப்‌ பட்டிருப்பதை அவர்‌ விரும்பவில்லை,

    • பூஞ்சோலையின்‌

தென்றலுடன்‌ கலந்து உலகெங்கும்‌ உனது நல்மணம்‌

கமமும்படிச்‌ செய்துவிடு. இழிவான சிறு அணுவாக இருக்கி றாயே, பெரும்‌ பாலைவனமாக மாறிவிடு! இலேசான இளங்காற்றின்‌ அலையாக இருக்கிறாயே, சக்தி வாய்ந்த பெரும்‌ புயலாகப்‌ பெருகிவிடு! உன்‌ அன்பின்‌ வன்மையி னாலே அற்பப்‌ பொருளையெல்லாம்‌ உயர்ந்ததாகவும்‌ புகமுடையதாகவும்‌ செய்குவிடு என்றுஇக்பால்பாடினார்‌. (இறைவன்‌ மறுமொழி என்ற கவிதைத்‌ தொகுப்பு)

குறுகிய தேசீய வெறியை அவர்‌ போற்றவில்லை. நாட்டுப்‌ பித்து எனும்‌ தூசியால்‌ அழுக்குப்‌ படாதிருக்கும்‌ | தரய ஆடையுடுத்திய மனிதனையே இறைவன்‌ போற்று கிறார்‌. குடியேறிச்‌ சென்ற நாடாகிய எகிப்தையும்‌ பிறந்த கன்‌ஆன்‌ நாட்டைப்போலவே ஏற்றுக்‌ கொண்ட பூஸப்‌ நபியைப்‌ போன்றவனையே இறைவன்‌ வாழ்த்துகிறார்‌!” என்று இக்பால்‌ பாடினார்‌.

முதலாளித்துவ அமைப்பு, உழைக்கும்‌ வர்க்கத்தை நசுக்கிப்‌ பிழிந்த கொடுமையைக்‌ கண்டு உருகிய இக்பால்‌ மனிதனை, சாதாரண மனிதனை, மகத்தான சக்தி களைத்‌ தன்னுள்ளே கொண்டிருக்கும்‌ மனிதனைத்‌ தட்டிக்‌ கொடுத்து ஆறுதல்‌ அளித்து நம்பிக்கை ஊட்டினார்‌.

“இந்த

உலகு

எனும்‌

கண்டு நீ கவலைப்‌ படாதே! லிருந்து நட்சத்திரங்களைப்‌ பிரகாசிக்கும்‌

காலம்‌

வரப்‌

பூங்காவின்‌

நாசநிலையைக்‌

விரைவில்‌ இதன்‌ கிளைகளி போன்ற பூங்கொத்துக்கள்‌ போகிறது.

பூந்தோட்டத்‌

திலிருந்து குப்பை கூளங்கள்‌ அகன்றுவிடும்‌ காலம்‌ வரப்‌ போகிறது. வானத்தின்‌ நிறத்தைச்‌ சற்றுக்‌ கண்ணெடுத்துப்‌ பார்‌. அது கருஞ்சிவப்பாயிருக்கிறது. இத்தோற்றமானது . பரிதி உதித்து மேலோங்கி வரும்‌ அறிகுறியாகும்‌.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/81&oldid=1523394" இலிருந்து மீள்விக்கப்பட்டது