பக்கம்:இலக்கியச் சாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

வ.சுப. மாணிக்கனார்



உட்பட்ட ஒரு சாதியைச் சார்ந்தும் இருத்தல் வேண்டும் என்ற கருத்து மணிவாசகர் காலத்து வளர வில்லைபோலும்) இவ்வாறு மதவூற்றம் இருப்பினும், கிளவித் தலைவி சிவனைப் பணிந்தாளாகத் திருக்கோவை பாடவில்லை. குலமகட்குத் தெய்வம் கொழுநனே என்பதும், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுதெழுவாள் என்பதும் தமிழ் மன்பதையின் கருத்துரையாதலின், மணிவாசகர் தலைவியைச் சைவச்சியாகக் காட்டினாலும், கணவனைத் தொழுபவளாக, அவனையன்றிப் பிறதெய்வம் தொழாதவளாகவே காட்டுவர்.

தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலமனையாள் தெய்வம் பணிந்தறியா ளென்று (304) தென்னவன் ஏத்துசிற் றம்பலத் தான்மற்றைத் தேவர்க்கெலாம் முன்னவன் மூவலன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே (306)

சிற்றம்பலம் போன்ற சிறப்புடைய தன் மனைவி தன்னைத் தவிர வேறொரு தெய்வத்தைப் பணிவது தெரியாதவள் என்று இல்லற வாழ்வில் கணவன் பாராட்டுகின்றான். தன் மகளின் இல்வாழ்க்கையைக் காணச் சென்ற செவிலியும் மற்றோர் தெய்வத்தை மனத்தாலும் நினையாதவள் என்று புலப்படுத்து கின்றாள். கோவைப் புரட்சிக்கும் ஒர் எல்லையுண்டு போலும், சமயப்பின்புலம்

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை என்ற தொல்காப்பியத்தின்படி, அகப்பாடல் முதல் கரு உரி என்ற முக்கூறுடையது என்பது பெறப்படும். முதலும் கருவும் இயற்கை பற்றியன. உரி என்பது மக்களின் காதல் நிகழ்ச்சி பற்றியது. சமய எழுச்சிக்குப் பின்னர்த் தோன்றிய அகத்துறைச் செய்யுட்களில் முதல்கரு என்ற இரண்டின் இடத்தைச் சமயம் கைப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் சமய மெய்ம்மைகளும் புராணக் கதைகளும் புகலாயின. இவற்றின் அடிப்படையில் கற்பனைகளும் சொல்நயங்களும் புனையப்பட்டன. மேலும், தலைவன் தலைவி முதலான அகமாந்தர்களும் ஒரு நெறி