பக்கம்:இலக்கியச் சாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

101



தழுவிய மக்களாகக் கொண்டமையின், உரிப்பொருளிலும் சமயம் கலப்பதாயிற்று. எனவே சங்கத்துப்பின் எழுந்த அகச்செய்யுட்கள் அகம் என்ற இலக்கணப் பெயரைப் பெற்றிருந்தாலும் நெறி முதன்மைப் பாடல்களாயின. சமயம் முதற்பொருளாயிற்று. அதனைச் சொல்லிப் பரப்புவதற்கு உரிப்பொருள் சார்புப் பொருளாயிற்று. இவ்வகைக் பொருள் மாற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்பவர் மணிவாசகர். சமயத்துறையில் அன்புப் புரட்சி கண்ட அடிகளார் இலக்கியத் துறையிலும் நீடிய பொருட் புரட்சி செய்தார். அப்புரட்சி பின்னைப்புலவர் எல்லாம் மேற்கொள்ளத்தக்க மரபாயிற்று. கோவை மரபு மணிவாசகர் கண்ட புதிய இலக்கிய மரபு.