பக்கம்:இலக்கியச் சாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

117



அம்பிகாபதிக்கோவையில் தலைவன் பாங்கற்கு இரங்கல், தலைமகனுக்கு அவன் நற்றாய் உரைத்தல், பதங்கம் (ஒருவகைப் பறவை) பழிச்சல், யாணரைக் காணவிரும்பல் என்றின்ன புதிய துறைகள் காணப்படுவ. திருவாரூர்க் கோவையில் வளம்படவுரைத்தல், நற்றாய்தமருக்கு அறத்தொடு நிற்றல், கழையொடு புலம்பல் என்ற புத்துறைகள் காணப்படுவ. தோழி.முன் தலைவன் யானை வினாதல், கலைமான் வினாதல் என்ற வினாக்கள் கோவைகட்கெல்லாம் பொது. சிராமலை, திருவாவடுதுறை, கல்ைசை, திருக்கழுக்குன்றக் கோவைகளில் வேங்கை வினாதல், வன்றி (பன்றி) வினாதல், மரைவினாதல் என்ற பல வினாக்கள் உள. மயூரகிரிக் கோவையில் சிங்கம் வினாதல், கரடி வினாதல், முயல் வினாதல் என மாணவர் வினாத்தாள் போலப் பல வினாக்கள் வருகின்றன. எல்லா வினாக்களுக்கும் நன் மாணவிபோலத் தோழி எதிர்மொழி பொருந்தச் சொல்லுகின்றாள். பல கோவைகள் இயற்கைப் புணர்ச்சி,இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற முறையால் அமைந்திருக்க, திருக்கோவை இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு என்ற முறையில் நிகழ்வுகளைக் கூறுகின்றது. வறிது நகைதோன்றல் என்னும் துறை கவிக்கூற்றாகும். முளைக்கும் சிறிய முறுவல் என் ஆகம் முடிவிக்குமே என மதுரைக் கோவையும், ‘என் செவ்வாய் நகைக்கிடம் தந்தது இனியார்க்கு நல்கும் நகைக்கிடமே எனக் கலைசைக்கோவையும் தலைவன்கூற்றாகச் செய்யுட்படுத்துவ, கோவை கோக்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லை என்ன? தலைமக்கள் களவு தொடங்கிக் கற்பாகி மகப்பேறு எய்தி இன்பமாக இருக்கும் இல்லற வாழ்க்கையே கோவைப் பொருளாகும். பரத்தையிற் பிரிவு காரணமாக வந்த ஊடலைத் தீர்த்துத் தலைவன் தலைவியை இன்முயக்கம் செய்கின்றான் என்பது திருக்கோவை முடிபு.போர்க்குச்சென்று மீண்டும்வந்த தலைவன் தலைவியோடு உடனிருந்து கார்ப்பருவங் கண்டு, முகிலே இனிப் பொழியத் தடையில்லை என்றான் என்பது தஞ்சைவாணன் கோவை முடிபு. ஒதற்குப் பிரிந்து வந்த தலைவன் மனைவியோடிருந்து இன்புற்று இறைவன் அடியை