பக்கம்:இலக்கியச் சாறு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

வ.சுப. மாணிக்கனார்



நினைக்கின்றான் என்பது மதுரைக்கோவை முடிபு. பொருள்வயிற் பிரிந்த தலைவன் காதலியை அகத்திட்டுச் செழுங் கொண்டலே திருவருள்போல் மும்மாரி பொழிக என்று ஏவுகின்றான் என்பது கலைசைக்கோவை திருவாவடுதுறைக் கோவை முடிபுகள். காதலியைக் கூடிய காதலன் முகிலை வாழ்த்துகின்றான் என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை தாம் பாடிய மூன்று கோவையிலும் மொழிவர். கோவை என்பது அகப்பொருட் கோவையாதலின் இல்லறமாக முடித்தலே நேரிது. துறவற முடிபு என்னானும் கோவைக்குப் பொருந்தாது.

அல்லோடு நண்பகல் ஜம்புல னாலரும்போ கந்துய்த்து வல்லியும் மல்லல் வளவய லூரனும் மாதருமே சொல்லிய கேள்வித் துறைமுடி வாய்ந்து துணைவியரோடு இல்லறங் காத்துத் துறவறந் தாங்கல் இணைந்தனரே என்பது அம்பிகாபதிக் கோவையின் இறுதிச் செய்யுள். கூட்டுறவுப் பண்ணைப் பாலில் உப்புவிழுந்தது போல இல்லறக்கோவையில் துறவறத் தனிமையைச் சொல்வது நெறிப்பிழையாகும். பிற கோவையரெல்லாம் இல்லற வாழ்க்கையாகவே முடித்திருப்பது அம்பிகாபதி முடிவு ஏற்கப்படவில்லை என்பதற்கு ஒரு கரி.

அகப்பொருட் செய்யுட்களில் பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடனுண்டு. பாட்டுடைத் தலைவன் வரல்வேண்டும் என்பது விதியுமன்று; விலக்குமன்று. அம்பிகாபதிக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் இல்லை. பாண்டிக்கோவை த்ஞ்சைவாணன் கோவை குளத்துர்க்கோவை நாணிக்கண் புதைத்தற் கோவைக்கு முறையே பாண்டியன் நெடுமாறன், சந்திரவாணன், வேதநாயகம் பிள்ளை, தளவாய் இரகுநாத சேதுபதி என்போர் பாட்டுடைத் தலைவர்கள். இக்கோவைகளில் இன்னவர்தம் மனைவியர் இணைத்துக் கூறப்படுதலில்லை. கிளவித் தலைவனுக்குக் கிளவித்தலைவி கோவையிற் சொல்லப்படுதல் போலப் பாட்டுடைத் தலைவனுக்கு மனைவியிருப்பினும் பாட்டுடைத்