பக்கம்:இலக்கியச் சாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

119



தலைவியாகப் பாடுபெறுதல் வழக்காறன்று.தலக்கோவைகளில் என்றால் பாட்டுடை இறைவனோடு இறைவியும் பிணைத்துப் பாட்டுப் பெறுதலைக் காண்கின்றோம் இது பெரு முரணன்று. சமயகால இலக்கியக் கூறு என்று சொல்லி யமையலாம். பாட்டுடைத் தலைமக்கள் இல்வாழ்க்கையைக் கிளவித் தலைமக்கள் இல்வாழ்க்கையோடு ஒப்பிட்டு உரைப்பதும் ஏற்றத் தாழ்வு காட்டுவதும் எவ்வாற்றானும் கூடாது.அகத்திணை மாந்தர் பெயர் சொல்லுதல் கூடாது எனின், அம்மாந்தர்களைப் பெயருடையவர்களோடு இணைத்து வாழ்வைப் பொருத்திச் சொல்வதும் கூடாதன்றே? துறைப் பொருட்குத் தகப் பாட்டுடைத் தலைவனது இல்வாழ்க்கையை அமைத்துப் புனையும் போக்கினைத் திருவெங்கைக் கோவையிற் கற்கின்றோம்.

புணர்ந்தாருள் வெங்கை புரநரதர் பாகம் புணர்ந்தநறு மணந்தாழ் குழலுமை மங்கையல் லாமல் மகிழ்நர்தமைத் தணந்தார் அமைகிலர் நீதரி யாமல் தளர்ந்தனையேல் பணந்தாழ் அகலல் குலாய்நகு வார்நினைப் பார்த்தவரே. இது (158) தலைவியைப் பாங்கி கழறுதல் என்னும்துறையாகும். தோழியிற் கூட்டத்துத் தலைவன் காலம் நீட்டித்தமையால் தலைவி மிக வருந்தினாள்.என்றும் பிரியாத்தன்மையும் பிரிய இயலாத் தன்மையும் உடையவள் ஒரே ஒருத்தி அவள் திருவெங்கை நாதர் பாகத்து இருக்கும் உமையே. மக்களுள் புணர்ந்தார் யார்க்கும் பிரிவு உண்டு. இவ்வியல்பறியாது நீ வருந்துவது நகைப்பிற்குஇடமாகும் என்று ஆற்றுவிக்கின்றாள் தோழி. திருவெங்கை இறையவனின் மனைவி சான்றாக அகப்பொருளில் வருதல் காண்க. -

கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத் தில்லைப் பதியின் நடமாடும் வெங்கைச் சிவனையல்லால் சொல்லிக் கொடுநின் மனம்நாம் குழைப்பத் துணிதலொரு புல்லைக் கொடுதண் கடல்நீந்த உன்னுதல் பூங்கொடியே. பாங்கியைத் தலைவன் பழித்தல் என்னும் துறைச் செய்யுள் (12) இது தலைவன் தன் குறைகளையெல்லாம் தோழியிடம் எடுத்துச் சொல்லுகின்றான்; தலைவி தனக்கு