பக்கம்:இலக்கியச் சாறு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

வ.சுப. மாணிக்கனார்



துறையளவில் வைத்துக் காட்டினேன். பொருளும் சொல்லும் ஒரு மொழிக்குச் சோறும் நீரும் போல்வன. ஒரு மொழிக்கண்ணே பொருளே மாத்திரம் வளர்க்கும் அறிஞன் உடைமைத் தீட்டு இன்றி நிலம் வழங்கும் அன்பனை யொப்பான். மொழிக்கு உடைமையாவது பண்புடைய சொற்களே, பொருளல்ல. இதனைத் தமிழ்வளர்ப்பிகள் நினைவில் வைக்கவேண்டும். தமிழ்ச் சொற்களையும் சொல் வடிவங்களையும் புதுக்கி ஆக்கிப் படைக்காத புலவன் தமிழ் சொல் மொழிக்கு உடைமைச் செல்வம் பெருக்காதவனே என்பது என் துணிபு. கோவைப் புலவர்கள் இக்குற்றத்திற்கு ஆளாகவில்லை. “ஒராட்டி பாகர் கலைசை. 362), பொன்னி நீர் நாட்டிலுள்ள தண்னெல்லாம்’(பழமலை. 103),"அன்பன் பின் செலும்வாறு எதுவோ (பழமலை.339) என்ற இடங்களில் ஆட்டி, தண், வாறு என்பன முதற் சொற்களாக ஆட்சி செய்யப்பட்டுள. வடுக்கின்ற மாந்தளிர் (திருவாரூர். 510), “குன்றமழைக்கக் குயில் அழையா நிற்பர்’ (அம்பிகாபதி, 15) என்ற பகுதிகளில் வடு, மழை என்ற பெயர்ச் சொற்கள் புதிய வினையெச்ச வடிவம்பெற்று,"வடுச்செய்கின்ற 'மழைபெய்ய’ என்னும் பொருளைத் தருகின்றன. இவ்வாக்கம் தமிழ்மொழி மரபிற்கு ஒத்ததே. இங்ஙனம் ஆக்கும் ஆற்றலையும், ஆக்கவேண்டும் என்னும் அன்பையும் இன்று நாம் இழக்கலாமா? இழக்கத்தான் இடங்கொடுக்கலாமா? தேனமர் சொல்லி,அம்பலமேபோலி,தில்லைபோவி, அன்பிற்சொல்லி, குயில் மன்னு சொல்லி, காட்டில் நின்றாடி, விளையாடி என்ற பெயர்ச்சொல் வடிவங்கள் திருக்கோவையில் நன்கு காணப்படும். முருகனுக்கு உரிய முரசை 'முருகியம்’(662) என்றும் பாவிகளைச் சீர்வழுத்தாப் பாவர்” (337)என்றும் இக்கோவை சுருங்கச் சொல்லும். உவளை, உங்குவை, உங்ஙன், உந்திடம், இந்திடம் என்ற அரிய சுட்டு வடிவங்கள் இக்கோவைக்கண் பயின்றுள்ளன.தமிழ்நர்கணிமை,நாயினர் (நாயுடையார்), மன்னாமை, கற்பு, (முறைமை), சோத்து, மடவியன், பேரான், (பேரன்) நயனி (நயனம் உடையவள்), காளையம் (போர்), கூண்டு (கூடி), பிறவு (பிறப்பு) முதலான சொற்களும், குழிஇ, வெரீஇ தழிஇ போன்ற அளபெடை வடிவங்களும் பல கோவையில் புதுவதாக வரக் காண்கின்றோம்.