பக்கம்:இலக்கியச் சாறு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

123



கோவையின்நடை

ஆசிரியம் வெண்பா முதலான யாப்பினால் கோவை பாடலாமாயினும், கலித்துறையே பழக்கப்பட்ட பாவாகும். பெரும்பாலான கோவைகள் இத்துறை யாப்பில் பாடப் பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் பாநடையும் தனித்தன்மை யுடையதாக விளங்குகின்றது. இவ்வெண்ணத்தோடு கோவைகளைப் படித்துப் பாருங்கள்.

கோடையும் கொண்டலும் கண்டறி யாத குளிர்பொழிற்கண் வாடையும் தென்றலும் மேவரு மேவரில் காண்பதன்னப் பேடையும் சேவலும் சேலும் வராலும் பிறங்குநன்னீர் ஒடையும் கங்கமும் சங்குமி ழாநின்ற ஒண்முத்துமே.

(அம்பிகாபதிக்கோவை-10) அருந்தும் பசியும் அடுமணற் சோறும் அயர்ந்திறைவன் வருந்தும் பசிக்கு வருந்துமில் வாழ்க்கையும் வேட்கையுடன் பொருந்தும் விருந்தும் புறந்தரு நீர்மையும் போற்றியவன் திருந்தும் திறஞ்செய லுங்கற்ற வாநின் திருமகளே.

(அம்பிகாபதிக் கோவை - 446) அம்பிகாபதி உம்மை நடையின் அன்பர் என்று பல பாடல்கள் காட்டுகின்றன. எண்ணும்மையும் பெய ரெச்ச வும்மையும் இப்பாடல்களில் அடுக்கி வருகின்றன. “விழியும் சிவந்த மொழியும் தளர்வுற்று மெய்யுங்கைத்து'(346) என்பது போல உம்மையும் வினையெச்சமும் இணைந்த நடையும் இவர்க்கு உரியது. திருக்கோவை கோவைச் செல்வங்களுள் சிறந்த செல்வம் என்பதனை யாவரும் அறிவர்திருவாசகத்தின் மணம் திருக்கோவையிலும் உண்டு. தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என் மனத்தே நல்கு' என்ற வெண்பாவில் ‘தேன்’ என்பது திருவாசகத்தைக் குறிக்கலாம். ‘வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்’ என்று பாராட்டப்படுதல் காண்க.

பேரென்ன வோவுரை யிர்விரை யிர்ங்குழற் பேதையரே (54) தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே (6.3) பாய்சின மாவென ஏறுவர் சிறுர்ப் பனைமடலே (74)