பக்கம்:இலக்கியச் சாறு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

வ.சுப. மாணிக்கனார்



மென்னனை யாய்மறி யேறி யேல்வெறி யார்மலர்கள் (125) உரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே (153) ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாதிவ் வணிநலமே (307) இவை திருக்கோவைக் கலித்துறையில் சில அடிகள். ஒரடியின் இடைச்சீர்கள் தம்முள் எதுகை மோனையழுத்தம் சிறந்தொலிக்கக் கேட்கின்றோம். அவ்வழுத்தத்தால் கருத்து வலிபெறவும் காண்கின்றோம். கோவைதோறும் ஒடுகின்ற தனிநடை நயத்தை ஆராய்ந்து பார்ப்பின், இடைக்காலத் தமிழ் நல்லோர் தமிழை இனிக்கச் செய்த பக்குவம் பெறப்படும். கோவைத்தோற்றம்

கோவைத் தோற்றம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இவ்வுரையை முடித்துக் கொள்வல். சங்க அக இலக்கியமெல்லாம் துறைத் தொடர்பற்ற தனிப் பாடல்கள் கொண்டன என்பது ஒரு பொதுப் பேருண்மை. ஆராய்ந்து பார்க்கின், அகநிகழ்ச்சிகளை வரன்முறையாகத் தொகுத்துச் சொல்லும் கோவை முறை சங்க காலத்திலேயே பிறந்துவிட்டது என நாம் அறியவேண்டும். ஆரியவரசன் பிரகத்தனுக்குத்தமிழை அறிவுறுத்த விரும்பிய கபிலர் குறிஞ்சிப் பாட்டுப் பாடினார்.இப்பாட்டு அறத்தொடுநிலை என்னும் துறைத்து.அன்னை ஏவத்தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் சென்றதும்,தலைவன் கெடுதி வினாயதும், மொழி பெறாது வருந்தியதும், யானையினின்றும் காத்ததும், புனலினின்று காத்ததும் முயங்கியதும், இரவுக்குறியின் இடையூறுகளும்,வெறியாட்டும், அறத்தொடு நிற்றலும் என்ற களவு நிகழ்ச்சிகள் வரிசையாக இப்பாட்டில் வந்துள்ளன.

எளியேம் துணிந்த எமஞ்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி யுணர செப்ப லான்றிசின் - (குறிஞ்சிப் 32) என்று நிகழ்த்த வண்ணங்களை அன்னைக்குத் தோழி கூறுகின்றாள். ஆதலின் குறிஞ்சிப் பாட்டினைச் சங்கத்தின் கோவைப் பாட்டு என்று கூறலாம். ஐங்குறு நூற்றில் நெய்தல் LITTLų–lu அம்மூவனாரும் கோவைப் புலவராவர்.