பக்கம்:இலக்கியச் சாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 429

ஒன் றுக்கொன்று முரண் எனப் பலர் கருதி வருப.நன்மை தீமை, இரவு பகல், பழி புகழ் என்பன முரண்பட்டவை. மரபும் புரட்சியும் இவை போல்வன அல்ல. புதுச்சாலை மிதிக்க மிதிக்கப் பழந்தடம் ஆவதுபோல இன்று புரட்சி நாளை மரபாய்க் கலந்து விடும். முகத்தினுள் கண்துடிபோலவும், நீரோட்டத்திற் சுழி போலவும், கண்விழியில் காதற்கூறு போலவும், புரட்சியும் மரபினுள் ஒரு பகுதி என்பதனை இலக்கியத்திறனிகள் உணர வேண்டும்.ஆதலின் கண்ணதாசன் முறைமைக் கவி என்னும்போது புரட்சியையும் உள்ளடக்கியே கூறுகின்றேன். -

திருவெம்பாவை 20 செய்யுட்கள்; திருப்பாவை 30 செய்யுட்கள்; ஆண்டாள் பாவை போலத் தைப்பாவையும் 30 செய்யுட்கள். யாப்பு வகையில் முப்பாவையும் பார்வைக்கு எட்டடியுடையன என்று தோன்றினாலும் முன்னிரு பாவைகளும் முழுதும் வெண்டளைப்பட்டவை. தைப்பாவை ஒரு சில பாடல்களே வெண்டளை கொண்டாவை. சந்த வேறுபாடான பாடல்கள் பலவுள.

(அ) மெய்வாய்கண் மூக்குச்

செவியாய் விளைந்திருக்கும் ஐவாயி லுள்ளும்

- அருமைத் திருமகளே (ஆ) வாவென்றன. இமைகள்

மண் நோக்கின விழிகள் தா வென்றன இதழ்கள்

தழுவென்றது மேனி (இ) அம்பொன் மணிமாடத்

தரசிருந்தான் எங்கோமான் தம்பொற் பதம்வருடித் -

தடங்கண்ணாள் துணையிருந்தாள் இவ்வாறு பாவையாப்பில் வெண்டளையும், பிற தளையும் விரவப் புதிய சந்தக் கலப்புக் கண்டவர் கண்ணதாசனார். ஒரிரு முறை படித்தாலே பள்ளத்துள் நீர்போல உள்ளத்துக் கவிதைகளை விழச் செய்யும் ஒசைப்

8S. е.