பக்கம்:இலக்கியச் சாறு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

வ.சுப. மாணிக்கனார்



பாடல்கள் இக்கவிஞர்பால் நிரம்பவுள. அதனாலன்றோ இவர்தம் பாடல்களை மதலைச் சிறு குதலைகள் விரைந்து பாடிப்பாடிக் களிப்பூட்டக் காண்கின்றோம். இத் தைப்பாவையில் ஒர் ஒசைப்பாட்டு.

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை வாழை யிலையோசை வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை ஆழி யலையோசை அத்தனையும் மங்களமாய் வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ! தோழியர் கைதாங்கத் தூக்கியபொன் னடிநோக மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய் . ஆ என்ற தொடக்க நெட்டொலி, அடுத்து ழகரத் தமிழொலி, இறுதியில் ஒ என்ற நெட்டொலி என்று ஊஞ்சல் போன்ற சந்தக் கிடப்பில் வரும் இச்செய்யுள் தைப்பாவைக்குத் தாலாட்டுப் பாவாய் அமைந்திருப்பதை உணரலாம். பட்டுப்போல் நெல் விளையும் பாடிவரும் காவேரி என்பர் கவிஞர். இவர்தம் செய்யுட்களும் அனைதிறந்து மடைதிறந்த காவேரி நடப்புப்போலச் செல்வதைச் செவி களனாக நுகர்கின்றோம்.

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்(திருவெம்பாவை) ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (திருப்பாவை) முன்னிருபாவைகளும் பாடல்தோறும் எம்பாவாய்' என முடிகின்றன . அப்பாடலைப் பாடும் மகளிர் தம் கூற்றாகப் பாடுதலின் 'எம்'என்ற அடைபொருந்துவதாகும். மேலும் இங்கு வரும் பாவையைப் பெண்பாவை எனவும் நோன்பு எனவும் பொருள் கொள்வர். கண்ணதாசனின் தைப்பாவை கவிக்கூற்று, தாய் கூற்று, மக்கள் கூற்று எனப் பாடல்தோறும் வேறுபடக் கொள்ளும் நிலையில் செல்கின்றது.

மார்கழிக்குப் பெண்ணாக

மாசிக்குத் தாயாகப் பேர்கொழிக்க வந்த

பெட்டகமே தைப்பாவாய்